பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூலி வேலை செய்துவரும் குடியா னவனின் வீட்டருகே வேலி ஒரம் புற்றினிலே விஷப்பாம் பொன்று வசித்ததுவே. குடியா னவனின் அருமை மகன் கொஞ்சும் மழலை பேசுபவன் கொடிய பாம்பு கடித்ததனல் கொல்லப் பட்டான் ஒருநாளில். பழிக்குப் பழிகான் வாங்கிடுவேன் ; பாம்பைக் கொன்று தீர்த்திடுவேன் மொழிந்தான் இப்படித் தந்தையுமே. மூண்டது கோபம் பாம்பதன்மேல். 91