பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனே, வேடிக்கை பார்க்க அங்கு வந்திருந்தவர்கள், "ஆமாம்: ஆமாம். அதுதான் சரி' என்று கூச்சலிட்டனர். பக்தயம் கட்டியவர்களுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை வெட்கத்துடன் திரும்பிவிட்டனர். இப்படி அவர் எவ்வளவோ வேலைகளை யுக்தியுடன் செய் திருக்கிருர். இதனுல்தான் அவருக்கு விரைவிலே விடுதலை கிடைத்தது. அடிமையாக இல்லாமல் எங்கும் இஷ்டம்போல் சுற்றித் திரிய முடிந்தது. சுற்றித் திரிந்து குட்டிக் கதைகளைக் கூறவும் முடிந்தது. ஈசாப் மிகுந்த புத்திசாலி. அவர் பேச்சும் செய்கையுமே அதை கன்கு காட்டுகின்றன. 弹 & ta: 受函 அவர் அடிமையாக இருந்தபோது ஒரு நாள் அவருடைய எஜமானர் வெளியூர் செல்லப் புறப்பட்டார். சாமான்களைத் துக்கி வருவதற்காகத் தம்முடன் சில அடிமைகளையும் அழைத்துச் செல்வது அந்த எஜமானரின் வழக்கம். அன்று எடுத்துச் செல்ல வேண்டிய சாமான்களை ஈசாப் ஒரு முறை பார்த்தார். பிறகு, மற்ற அடிமைகளைப் பார்த்து: “எனக்கு அதிக கனயில்லாத சுமையைத் தர வேண்டும்" என்று கேட்டார். ஈசாப்பிடம், மற்ற வேலைக்காரர்களுக்கு எப்போதுமே கல்ல மதிப்பு உண்டு. ஆகையால், சரி, உனக்கு வேண்டிய சாமான எடுத்துக்கொள்' என்ருர்கள், அவர்கள். உடனே ஈசாப் அங்கிருந்த ம்ெனிய கூடை ஒன்றை எடுத்துக் கொண்டார். அக்கூடை கிறைய ரொட்டிகள் இருக் தன, வழியில் சாப்பிடுவதற்காக. ஈசாப் பெரிய கூடையைத் துணிக்கிக் கொண்டதும் மற்ற அடிமைகள் சிரித்தார்கள். 霞贯8