பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னப்பா இது! கனமில்லாத சுமையாக வேண்டு மென்று கேட்டாய். இவ்வளவு பெரிய கூடையைத் தூக்கிக் கொண்டிருக்கிருயே என்ருர்கள். ஈசாப் ஒன்றும் பதில் கூறவில்லை. ஆளுல், ஈசாப் ஒரு முட்டாளல்ல என்பதை அவருடைய கண்பர்கள் தெரிந்துகொள்ள வெகு நேரமாகவில்லை. ஈசாப் வைத்திருந்த கூடையிலிருந்த ரொட்டிகளை வேளா வேளைக்கு அவர்கள் எடுத்துத் தின்று வந்ததால், கனம் குறைக்து கொண்டே வந்தது. செல்ல வேண்டிய ஊரை கெருங்கும்போது ஈசாப் வெறும் கூடையுடன் ஆனந்தமாக கடந்து சென்ருச். ஆஞல், மற்றவர்கள் அப்படிச் செல்லவில்லை ; போகப் போக அவர்கள் சுமையைத் துக்க முடியாமல் அலுத்துப்போய் விட்டனர். அப்போதுதான் அவர்கள் ஈசாப்பின் புத்திசாலித்தனத்தை உணர்ந்தனர்! -4 ஈசாப் வசித்த ஊரில் பொது மக்கள் குளிப்பதற்காக ஒரு குளம் அமைக்கப்பட்டிருந்தது. அன்று ஈசாப்பின் எஜமானர் அந்தக் குளத்தில் குனிக்க எண்ணிஞர். உடனே ஈசாப்பை அழைத்து, அந்தக் குனத்தில் கூட்டம் இருக்கிறதா என்று பார்த்து வரச் சொன்ஞர். ஈசாப் போய்ப் பார்த்தார். அப்போது அந்தக் குளத்தின் வாயிலில் நீளமான ஒரு கல் கிடக்தது. குளிக்கச் செல்வோரில் சிலர் அதைத் தாண்டிக்கொண்டு சென்றனர்; சிலர் அதில் தடுக்கி விழுந்து, பிறகு எழுந்து சென்றனர். ஆஞல், ஒருவர் கூட அதை அப்புறப்படுத்த வில்.ை ஈசாப் இந்தக் காட்சியைக் கொஞ்ச கேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அதே சமயம் அங்கு வந்தார் ஒருவர். அவர் அக்தக் கல்லைத் தூக்கி ஓர் ஓரத்தில் போட்டுவிட்டுக் குளிக்கச் சென்ருர், 119