பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றே அவரும் கூறுகையில்

ஏங்கித் தவித்த அப்பையன்,


"ஐயா, உயிரோ போகிறதே!

அடியேன் பிழைத்திட இப்பொழுதே


உதவி செய்தால் பலனுண்டு.

யோசனை அப்புறம் கூறிடலாம்.


ஐயோ! உதவி உதவி!” என

அலறினன். உடனே அம்மனிதர்


உணர்ந்தனர் பையன் நிலைமைதனை;

உடனே ஆற்றில் பாய்ந்தனரே !


பாய்ந்தே அவனைக் கரைதனிலே

பத்திர மாகச் சேர்த்தனரே !


சிறுவன் பிழைத்தான், அவருடைய

சிறந்த உதவி பெற்றதனால்.


உதவி எதுவும் செய்யாமல்

யோசனை சொல்வதில் பலனுண்டோ ?


'இல்லை, இல்லை என்றேதான்

இக்கதை மூலம் உணர்கின்றோம்.

12