பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழி ஒன்று குடுகு டென்று ஓடி வந்ததாம்-வந்து குப்பை மேட்டில் ஏறிக் கிளறிக் கிளறிப் பார்த்ததாம். தின்ன ஏதும் தானி யங்தான் அங்கே இல்லையாம்-பசி தீர்த்துக் கொள்ள வழியில் லாமல் ஏங்கி கின்றதாம். அந்தச் சமயம் தரையில் ஏதோ பளப ளத்ததாம்-மிக்க ஆவ லாக அருகிற் சென்று கூர்ந்து பார்த்ததாம். கண்ணைக் கவரும் வைரம் ஒன்றைத் தரையில் கண்டதாம் -உடன் கலக்கத் தோடு அதனைப் பார்த்துக் கோழி சொன்னதாம்: 13