பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படி அற்புத சாமியுமே இதனைப் பொறுத்தனர் ? யானறியேன்: தினம்தினம் மனைவியர் இருவருமே சிலசில மயிர்களை அகற்றியதால் குறைந்தன; குறைந்தன; வெகுவிரையில் மறைந்தன தலைமயிர் யாவையுமே! கத்திகள் எவையும் இல்லாமல் கைத்திறம் ஒன்றே துணையாக மொட்டை அடித்தனர் அவர்தலையை, மூத்தவள், இளையவள் இருவருமே !

  • சீப்பும் எண்ணெயும் இனிவேண்டா.

சிக்கன மாக வாழ்ந்திடலாம்’ என்றே அற்புத சாமியுமே எண்ணிட வில்லை, அச்சமயம் ! "இருவரை மணந்தேன். ஆதலினல், என்றன் தலையும், ஐயையோ! பாலை வனமாய்ப் போனதுவே ! பட்டது போதும்' என்றனரே ! 19