பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உண்மைப் பன்றி இதுபோல்தான் ஒசை செய்யும். ஆஹாஹா ! என்னே அருமை : அருமை'யென யாவரும் அவனைப் போற்றினரே. திரும்பத் திரும்பக் கோமாளி செய்தான் அந்த வித்தையிஜன. "அருமை ! இதுபோல் செய்திடவே யாரால் முடியும்?' என்றனரே. இந்தக் காட்சியைக் கண்டதுமே, எழுந்து வந்தான் முனியாண்டி, வந்ததும் சபையில் இருந்தோரை வணங்கி வார்த்தைகள் கூறினனே . "பன்றி போலக் கத்தியதைப். பார்த்தும் கேட்டும் மகிழ்ங் தீர்கள். இன்னும் கன்ருய்க் கத்திடவே எனக்குத் தெரியும், கம்புங்கள். கன்ருய்ச் செய்து காட்டிடுவேன். காளை இரவே கடத்திடலாம்” என்ருன். உடனே பிரபுவுமே இணங்கினர். மறுநாள் கடத்திடவே. 2?