பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்த மனிதர் கரிகள் தம்மை அயர்ந்தி டாமல் விரட்டியே சென்று அவற்றில் ஒன்றை மட்டும் சிரமப் பட்டுப் பிடித்தனர். பிடித்த கரியின் வாலில் துணியைப் பிரிய மோடு சுற்றினர்; எடுத்து வந்து துணியின் மீது எண்ணெய் தன்னை ஊற்றினர். தீங்கு செய்த கரியின் வாலில் தீயை வைத்து, முதுகிலே ஓங்கி ஓங்கித் தடியி னுலே உதைத்து விரட்ட லாயினர். பதறிக் கொண்டே ஊளே யிட்டுப் பாய்ந்து ஓடும் கரியுமே கதிர்கள் முற்றி யிருந்த வயலைக் கடந்து செல்ல நேர்ந்தது. கரியின் வாலில் வைத்த தீயும் கன்கு பற்றி எரிந்ததால், அருமை யான கதிர்கள் யாவும் ஐயோ, பற்றிக் கொண்டன! 28