பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலில் ஆடு மேய்த்த சிறுவன் இதனைக் கண்டனன்; வந்து வேட்டை நாயி டத்தில் கேட்க லாயினன்: சின்னஞ் சிறிய முயலைப் பிடிக்க முடிய வில்லையே! திரன், வேட்டை வீரன்’ என்று பெருமை கொள்வதேன்? என்ன கார ணத்தி னுலே தோல்வி வங்ததோ?” என்று கேட்க, வேட்டை நாயும் பதிலு ரைத்தது: 'எனக்கும் அதற்கும் உள்ள தான வித்தி யாசத்தை எளிதில் அறிந்து கொள்ள லாமே! தெரிய வில்லையா? உணவுக் காகத் தொடர்ந்து சென்ற எனது ஒட்டத்தால், உயிரைக் காக்க ஓடும் முயலை வெல்ல முடியுமோ?” 40