உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குட்டிக்கதை மன்னன்

தெருவில் குழந்தைகள் ஆடிப் பாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தார் ஒரு பெரியவர். உடனே, குழந்தைகள் கூட்டத்தில் புகுந்தார்; அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.

அச்சமயத்தில் அவ்வழியாக வந்தான், ஒருவன். ஒரு பெரியவர் குழந்தைகளுடன் சேர்ந்து குதித்து விளையாடும் காட்சியை அவன் கண்டான். உடனே, அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

“ஓய் பெரியவரே, உமக்கு என்ன வயதாகிறது! நீர் இப்படிக் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டு கும்மாளம் போடுகிறீரே! தராதரமே உமக்குத் தெரியவில்லையே!” என்று கேட்டான், அவன்

உடனே, அந்தப் பெரியவர் சிரித்தார், சிரித்துக் கொண்டே அங்கிருந்த ஒரு வில்லை எடுத்தார். வில்லின் இரு நுனிகளுக்கும் இடையே கட்டப்பட்டிருந்த கயிற்றை நன்றாக அவிழ்த்தார். பிறகு அதைக் கீழே போட்டு விட்டு அந்த மனிதனைப் பார்த்தார். பார்த்து,

“நண்பரே, இதோ இருக்கிறதே வில், இதை எப்போதும் கட்டியே வைத்திருந்தால், இது நன்றாக வேலை செய்யாது. அதாவது, அம்பை எய்யும் போது இது நன்றாக வளைந்து கொடுக்காது. அதனால், அம்பும் வேகமாக நீண்ட தூரம் செல்லாது. சில சமயங்களில் முறிந்து கூடப் போய் விடலாம்! தேவையில்லாத போது, கயிற்றை அவிழ்த்து விட்டால்தான் வில்

5