பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்றாக வேலை செய்யும்; அம்பும் வேகமாகச் செல்லும். வில்லைப்போல் நான் நாமும் எப்போதும் பெரியவர்களாகவே இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது நல்லதல்ல. கொஞ்ச நேரமாவது நாம் பெரியவர்கள் என்பதை மறந்து, குழந்தையோடு குழந்தையாக இருந்தால்தான் நமக்கு உற்சாகம் ஏற்படுகிறது; வாழ்க்கை திருப்தியளிக்கிறது” என்றார்.

இதைக் கேட்டதும், அந்த மனிதனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை; பேசாமல் அவ்விடத்தை விட்டு நழுவிவிட்டான்!

அந்தப் பெரியவர் இம்மாதிரி எத்தனையோ உதாரணங்க களைக் காட்டி விருக்கிறார். எத்தனையோ குட்டிக் கதைகளைக் கூறியிருக்கிறார். அவர் கூறிய குட்டிக் கதைகள் ஒன்றா, இரண்டா? சுமார் 100-க்கு மேலிருக்கும். அந்தக் கதைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. கிறிஸ்தவ வேதமான பைபிளுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானவர்கள் படித்து வரும் கதைகள் அவருடைய கதைகள்தாம்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீதியைக் கூறும் உயர்ந்த கருத்தை எடுத்துக் காட்டும்.

இப்போது பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் நாம் பல கதைளைப் படிக்கிறோம். ஆனால், அந்தப் பெரியவர் காலத்தில் பத்திரிகையும் இல்லை; புத்தகமும் இல்லை. அவர் இதை எதிலுமே எழுதி வைக்கவில்லை. அப்படியானால், அவருடைய கதைகனை உலகிலுள்ளவர்கள் எப்படிப் படிக்க முடியும்?

அவர் தெருவிலே போய்க் கொண்டிருப்பார். அப்போது இருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள். உடனே அவர், சண்டை போடாமல் அவர்களைத் தடுப்பார்; அங்கேயே, ஓர் அழகான கதையையும் கூறுவார். உடனே, அந்த இருவரின் கோபமும் பறந்துவிடும், சண்டை போட்டது தவறு என்று உணர்ந்து விடுவார்கள்.

6