பக்கம்:ஈச்சம்பாய்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

ஈச்சம்பாய்


வேல் கம்புகள், இடுப்போடு தொங்கின. தலைக்கு மேல் போன வெட்டரிவாள்கள் வயிற்றைத் தொட்டன. சூரிக்கத்திகள் குறி விலகி நின்றன. அந்தச் சமயம் பார்த்து அந்த இளம் பெண்ணின் மாராப்பிலிருந்து திமிறி வெளிப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை, ஒரு வேல் கம்பனைப் பார்த்து, கழுத்தைச் சாய்த்து ஒய்யாரமாகச் சிரித்தது. அந்தக் கம்பைப் பிடித்து ‘தாத்தா’ என்று இழுத்தது. கைக்குழந்தைக்காரி விக்கலும், விம்மலுமாய் அழுதழுது சொன்னாள்:

“நீங்க எங்க அய்யா மாதிரி, அதான் இவா தாத்தா மாதிரி இருக்கீக. அதனாலதான் இவா இப்படிச் சிரிக்கா.... வேணு முன்னா வெட்டிட்டுப் போங்கய்யா. ஆனாலும் ஒரே வெட்டா வெட்டுங்க. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாகணும். கை போயி, கால் போயி, எங்கள முடமா மட்டும் விட்டு வைக்காதீங்க.”

தாத்தா பட்டம் வாங்கிய வேல்கம்பருக்கு என்னவோ போலிருந்தது. அவர் பேத்தியும் இவள் மாதிரிதான். மகள் கூட, அந்தக் குழந்தையின் அம்மா சாயல்தான். சண்டியன் தோளில் கைபோட்டு, தோழமையாய் யோசனை சொன்னார்:

“ஒருவேள இவங்க நம்ம சாதியா இருக்கலாம்... பாண்டவர்கள் அரவான பலி கொடுத்தது மாதிரி, நாம கொடுத்துடக் கூடாது. ஏமுல நீங்க எந்த சாதிடா?”

வேன் பொறிக்குள் சிக்கியவர்கள் பதிலளிக்கும் முன்பே, சண்டியன் பதிலளித்தான்.

“இதுகூடவா ஒனக்கு தெரியல நம்ம சாதி உயரம்... இவனுக குள்ளம். நாம பெரிய பெல்ட்டா போட்டிருக்கோம்... இவனுக சின்ன பெல்ட்டா போட்டிருக்கானுக. நம்ம சாதி எதிர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/106&oldid=1371803" இலிருந்து மீள்விக்கப்பட்டது