பக்கம்:ஈச்சம்பாய்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

ஈச்சம்பாள்


வேல்கம்பர் அந்த வாசிகளில் ஒரு நடுத்தர வயது நோஞ்சான் மனிதரை உற்றுப் பார்த்துக் கேட்டார். உடனே அந்த நோஞ்சான் எழுந்து பதிலளித்தார்:

“சாதின்னு பாத்தா, இதுல பாதிபேரு இரண்டு சாதிக்கும் பிறந்தவங்கன்னு வச்சிக்கலாம். மத்தவங்க இருக்காங்களே... அந்த மத்தவங்க...”

“ஏய்! பாசாங்கா செய்யுற..? உன் சாதியை நானே கண்டுபிடிக்கேன். மத்தவங்க கம்மா இருக்கணும். இந்தாடா நீயே சொல்லு, ஒங்க குலதெய்வம் எதுடா? சொல்றியா? இல்லே ஒரே வெட்டா...”

“சொல்லுறேன்.. அய்யா சொல்லுறேன்.. எங்க குலதெய்வம் சுடலைமாடன்.. வீட்டுத் தெய்வம் மாரியம்மன்- ஊர் தெய்வம் மயான புத்திரன்.”

“ஒங்க பொழப்பு என்னடா?”

“கொஞ்ச நஞ்சை நிலம்... கூலிக்கு விவசாய வேலை. காலையில கஞ்சி... சாயங்காலம் சாராயம். நம்புனவனுக்காவ தலையைக் கொடுக்கிறது. நம்பி நம்பியே ஏமாந்து போறது. இதுதான நம்ம ஜாதியோட குணம்.”

வேல்கம்பரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு சண்டியன் அரிவாளை தடவி விட்டபடியே கேட்டான்:

“சரி... ஒங்க சாதியைச் சொல்லவேண்டாம். எங்க சாதியாவது எந்த சாதின்னு சொல்லுங்க, பார்ப்போம்.”

“நம்ம சாதின்னு சொல்லுங்கையா... நெஞ்சு கொதிக்குதய்யா. நம்ம சாதி சனங்கள, அந்த சாதிப் பயல்க வெட்டிப் போடுறதை நினைச்சா ரத்தம் கொதிக்குதய்யா... அந்த சாதியில ஒருத்தன கொன்னுட்டுத்தான் மறுவேலைன்னு வைராக்கியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/108&oldid=1371814" இலிருந்து மீள்விக்கப்பட்டது