பக்கம்:ஈச்சம்பாய்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

பழங்குடி மக்களிடையே நிலவும் தேவதாசிமுறை முதலியன பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'ஈச்சம்பாய்' அப்படி அமைந்த கதைதான். குருவி சாதி மலைமக்களின் உடைமுறை, நடைமுறை அடிப்படையில் பின்னப்பட்ட இக்கதையின் தலைவி பெல்லிபாய், ஒரு குழந்தைக்குத் தாயான விதவை. இவள் வேறு குலத்தைச் சார்ந்த ஒருவனைக் காதலிப்பதும் அதற்குத் தடையேற்படுவதும், காதலனா, குழந்தையா என அல்லாடித் தாய்மை மேலோங்குவதும் இயல்பாகச் சித்திரிக்கப்படுகின்றன.

ஆகக் கடன்பட்டு மகனை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டுக் கடன் அடைபடாத கவலை ஒருபுறமும், மகன், பணம் அனுப்பவில்லையே என்னும் வருத்தத்தையும் மீறி, அங்கு அவன் நன்றாக வாழ்ந்தால் போதும் என்னும் பாசம் ஒருபுறமாக ஊசலாடும் பெற்றோரைப் 'பாசக்கணக்கு' காட்டுகிறது.

விலங்குகள் - பறவைகள்....

மனித உணர்வுகளைத் திறம்பட வரையும் சொல்லோவியரான சமுத்திரம், விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் வாழ்முறைகளையும், சுற்றுச்சூழல் இயற்கை வளங்களையும் கூர்ந்து நோக்குவதில் வல்லவர். 'ஞானப் பரிணாமம்' என்னும் உருவகக் கதையில் குரங்குகளின் இயல்பை நுணிகி நோக்கி விளக்கியுள்ள திறத்தை முன்னரே கண்டு வியந்திருக்கிறேன். இத்தொகுப்பில் "காதல் குருவிகளின் பார்வையிலே...' என்னும் கதையில் பறவைகளின் இயல்புகள், அவை கூடு கட்டும் நுட்பம் முதலியன விரிவாகப் பேசப்படுகின்றன. பறவைகளில் ஓர் இணை தனிமைப்படுத்தப் பட்டுக் கதையினூடே வரும் மானிடக் காதல் இணையொடு தொடர்புப் படுத்தப்படுகிறது. இறுதியில் மானிடக் காதலின் போலித்தன்மை புலப்படுத்தப்படுகிறது. நாய்களின் இயல்பைக் கூர்ந்து நோக்கி "ஒரு நாய் இன்னொரு நாயைத் துரத்தும்போது, துரத்தப்பட்ட நாய், வாலை, காலுக்குள் விட்டாலோ, இல்லன்னா மல்லாக்கப்படுத்து நாலு காலையும் மேலத் தூக்குனாலோ கடிக்க வந்த நாய் கடிக்காது. ஆனால் இந்த மனுசன் மட்டுந்தான், எதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/11&oldid=1495093" இலிருந்து மீள்விக்கப்பட்டது