பக்கம்:ஈச்சம்பாய்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

ஈச்சம்பாய்


“பெல்லிபாய், இந்தக் காட்டுப் பகுதியில் சர்க்கார் பள்ளிக்கூடம் கட்டுறதுக்கு, ஆட்களோட ஆட்களா வந்த என் கூட, மூணு மாசமாய்ப் பேசறே. என்னைப் பற்றிப் புரிஞ்சிட்டிருப்பே. நாம ஒருவரை ஒருவர் தொட்டதில்லே. கெட்டதில்லே.... ஆனாலும் ஒருத்தர் மேல் ஒருத்தர் ஆசைப்படாமலும் இல்லை. நாளையோட கட்டிட வேலை முடியுது. நாளை சாயங்காலமாக எல்லோரும் போகப் போறோம். நீயும் வர்ரதாக இருந்தால் என் கூட வா. காலமெல்லாம் உன்னை ராசாத்தி மாதிரி காப்பாத்துறேன். ஹேமாவதி அணைக்கட்டு இருக்கிற கோரூர்ல எனக்கு வேலை கிடைச்சிருக்கு. ரெண்டு பேரும் அங்கே போயிடலாம். என்ன சொல்றே? சரி, உடனே ஒன்னால சொல்ல முடியாது. இதோ புடவை, இதோ ஜாக்கெட் உனக்கு என்கூட வரச் சம்மதமுன்னா, நாளைக் காலையிலேயே, எங்க கௌடா பொண்ணுங்க மாதிரி, ஒங்க ருக்மணிபாய் மாதிரி, கொசுவம் வச்சுப் புடவை கட்டி ஜாக்கெட் போட்டு வா. அப்படி வந்தால் ஒனக்கு, என்கூட வாழ இஷ்டமுன்னு அர்த்தம், இல்லைன்னா, மூகாம்பிகா விட்ட வழின்னு எடுத்துக்கிறேன். சரி, இப்போ உன் வீட்டுக்கு புறப்படு.”

அப்போது அருகில் நின்றாலும் தொலைவில் நின்று பேசுவதுபோல் தென்பட்ட சிக்கய்யா, இப்போது அவள் அருகே நிற்பதுபோல் தோன்றினான். ‘என்னோட வா... வா’ என்று பல்லவி பாடினான். பிறகு, ‘பெல்லி, கல்யாணமான ஆறு மாதத்திலேயே உன் வீட்டுக்காரன் குடிச்சுக் குடிச்சு இறந்துட்டான்னு சொல்றே. அப்புறம் உன் பெரிய மச்சான், சின்ன மச்சான், அவன்க சம்சாரங்கள், பிள்ளைக் குட்டிகளோட கூட்டாய் வாழ்ந்துவாரே... ஒன் புருசன் நிலமும் அவங்க பராமரிப்பிலேயே இருக்குதுன்னு சொன்னே.. ஆனாலும், ஒன்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/114&oldid=1371651" இலிருந்து மீள்விக்கப்பட்டது