பக்கம்:ஈச்சம்பாய்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

11


மச்சான் பெண்டாட்டிங்க ஒனக்கு சரியா சோறு போடல. ஒன் பச்சைக் குழந்தை பாலில்லாம சாகுற நிலைக்குப் போயிட்டுது. மேளாவுல சொன்னே. எவனாவது தட்டிக் கேட்டானா? என் சொத்தைப் பிரிச்கக் கொடுக்கச் சொல்லுங்கன்னு சொன்னப்போ, மேளா எஜமானன் என்னா சொன்னான்னே... ‘ஒழுங்கா, கொடுக்கிறதை தின்னுட்டு இரு. இல்லன்னா...’ என்று மிரட்டுற இப்படிப்பட்ட இவங்களோட நீ எதுக்காக சாகாமச் சாகணும்? இந்த இருபத்திரண்டு வயசுல, கிராமத்துப் பெண்கள்கூட ரெண்டாம் கல்யாணம் செய்துக்கிற இந்தக் காலத்திலே, நீ எதுக்காக வாடி வதங்கனும் மேளாக் கட்டத்துல தனியாய் தவித்து வாழ்ந்த நீ என்னோட என் கூட்டாய் வாழப்பிடாது? இப்பவே சொல்ல வேண்டாம். நாளைக்குச் சொல்லு. இந்தப் புடவை மூலம் சொல்லாமல் சொல்லு; ஜாக்கெட் மூலம் பேசாமல் பேசு.”

பெல்லிபாய், வீரியப்பட்டாள். கதவைச் சாத்திக் கொண்டாள். மார்பு வரை கட்டியிருந்த மலைஜாதிப் புடவையை வீசியடித்தாள். சிக்கையாவின் புடவையை இடுப்பில் சுற்றினாள். அவனே புடவையைக் கட்டிவிடுவதுபோல் ஒரு பிரமை. பாசி மாலைகளை வீசியெறிந்துவிட்டு, ஜாக்கெட்டை எடுத்தாள். தலை தட்டியது, ஓ... தொப்பியா.. தாழை மட்டைத் தொப்பியை எடுத்து, மூன்று தடவை தலையைச் கற்றி வட்டமடித்துத் தூக்கி எறிந்தாள். ஜாக்கெட்டைப் போட்டாள். சரியாய் இருக்கே! நல்லாத்தான் அளவு எடுத்திருக்கான்!

பெல்லிபாய், புதிதாய்ப் பெண்ணுருவம் கொண்டவள்போல் மின்னினாள். உடம்பில் பட்ட ஆடைபோல், மனதுக்கு உறுதி உடையாகியது. கைக் கண்ணாடியை எடுத்து, அதை உடம்பில் பல்வேறு இடங்களுக்கு எதிராகக் காட்டிப் பிடித்தாள். சற்று

எ.8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/115&oldid=1371660" இலிருந்து மீள்விக்கப்பட்டது