பக்கம்:ஈச்சம்பாய்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

ஈச்சம்பாய்


முன்புவரை, மார்புக்கு மேல் ஒன்றுமில்லாமல் இருந்தவள். இப்போது லேசாய் தெரிந்த வயிற்றை புடவையால் மறைத்தாள். இறுகப் பற்றிய ஜாக்கெட், அவளுள் ஒரு கிளுகிளுப்பையும், மார்பை மறைத்த முந்தானை ஒரு மதமதப்பையும் கொடுத்திருக்க வேண்டும்.

திண்ணையில் ஈச்சம் பாயில் தூங்கும் மகனை, கண்ணால் ரசித்தபடியே, மேளா முற்றத்துக்கு வந்தாள். ‘திருவலில்’ கேழ்வரகை மாவாக்கிக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்தாள். தாழை மட்டைத் தொப்பியில் புத்த பிட்சுகள் மாதிரி தெரிந்த கிழவிகளைக் கண்ணால் ஓரம் காட்டினாள். மேளா எஜமானரு பாபன் நாயக்கனைப் பார்த்தாள். என்னடி புதுமாதிரியான புடவை என்று ஒருத்தனாவது, ஒருத்தியாவது கேட்கட்டுமே? இல்லன்னா திட்டவாவது செய்யட்டுமே... எல்லோருமே அவள் அங்கே இல்லாததுபோல் ‘பாவலா’ செய்தார்கள். ‘கூலி வாங்கிட்டு வாரேன்’ என்று பொதுப்படையாய் வலியச் சொன்னாள். ஒருத்தராவது அவளைத் திரும்பிப் பார்க்கட்டுமே?

பெல்லிபாய், அலட்சியப்படுத்துபவர்களை லட்சியம் செய்தபடியே மெல்ல நடந்தாள். பூசி முடித்த பள்ளிக் கட்டிடத்தின் படிக்கட்டில் சாய்ந்தபடி கிடந்த சிக்கையாவைப் பார்த்துவிட்டாள். மேளாக்கட்டோ அங்கே பார்த்த முகங்களின் பாராமுகமோ அவள் மனத்தில் இருந்து தூள் தூளாயின. ஓட்டமும் நடையுமாய்ப் பாய்ந்து, சிக்கையாவின் முன்னால் நாணத்தோடு நின்றாள். அவனோ, வாயும் ஒரு கண்ணாவதுபோல், அகலமாக அவளைப் பார்த்தான். பாக்கு மரத்தின் பாளை நிறத்தில் - காட்டுக் கற்றாழையின் ஒற்றைச் சூலம் போன்ற கம்பீரத்தில், அசல் கௌடா பெண்ணாய் மாறிய அந்த மலைமகளை, அவன் மலைத்துப் பார்த்தான். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/116&oldid=1371663" இலிருந்து மீள்விக்கப்பட்டது