பக்கம்:ஈச்சம்பாய்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

115


மேனியை மானசீகமாகக் கலைத்துப் பார்த்தான். பிறகு, தன்னம்பிக்கையோடு சொன்னான்:

‘நீ வருவேன்னு தெரியும். என்னோடு வாழ்வேன்னு புரியும்.’

‘எனக்குப் பயமாய் இருக்குதுய்யா. துக்கம் வருது.’

‘இன்றைய துக்கம் நாளைய சந்தோஷம்.' ’

'அப்புறம் இந்தச் சிக்க சம்சாரா சொக்க சமசாரா விஷயம்...

‘என்ன சொல்றே?’

‘என்னால உனக்குப் பிரயோஜனம் இருக்காதுன்னு சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருய்யா. குழந்தை பிறந்தவுடனேயே, மேளா ஆட்கள் எனக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்துட்டாங்க. அதனால எனக்கு...’

‘அடி பைத்தியம்! நீ அந்த விஷயத்தை சொன்ன பிறகுதான், உன்னைக் கல்யாணம் செய்துக்கிறதுன்னே முடிவுக்கு வந்தேன். ஏற்கனவே நமக்குத்தான் ஒரு குழந்தை இருக்கே. பயல் இன்னும் ஈச்சம் பாயிலிருந்து எழுந்திரிக்கலியா? அவனை ஒரு அப்பன் வீட்டுக்குக் கூட்டிப் போறது மாதிரி கூட்டிவா, சரி. இனிமேல் பேச வேண்டிய விவகாரங்களை அப்புறமாய்ப் பேசிக்கலாம். காண்டிராக்டரோட லாரி, சாயங்காலத்துக்குப் பதிலா இன்னும் அரை மணி நேரத்துக்குள்ளே வரப் போகுது. நீ மேளாவுக்குப் போய்க் குழந்தையை உன் அப்பா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறது மாதிரி கூட்டிட்டு வந்துடு. நீ வருகிற விஷயம் எங்க ஆட்களுக்கும் தெரியும். அதனால பிரச்சினை இருக்காது. உம், புறப்படு.’

பெல்லிபாய், அவனைப் பார்த்துப் பார்த்து கால்களை நகர்த்தினாள். முகம் பூரித்துப் போய் கண்கள் மின்னின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/117&oldid=1371668" இலிருந்து மீள்விக்கப்பட்டது