பக்கம்:ஈச்சம்பாய்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகமறியா முகம்

ஊரு ஒலகத்தில் காதலிப்பதுபோல், தானும் காதலிக்காமல் போனதுக்கு ராசகுமாரி, வட்டியும், முதலுமாய் வருத்தப்பட்டாள். அந்த அரங்கு வீட்டின் கடைசி அறைக்குள் வாசல்படியில் உட்கார்ந்து கொல்லைப்புறத்தைப் பார்த்தபடியே குழைந்தாள். இரண்டு சிட்டுக்குருவிகள், அவள் முன்னால் சல்லாபம் செய்து கொண்டிருந்தன. முன்பெல்லாம் அவற்றை ரசித்துப் பார்க்கும் அவள், இப்போது, கைகளை ஆட்டி அவற்றை கலைக்கப் போனாள். பிறகு அவையாவது நல்ல ஜோடியாகி இருக்கிறதே என்று நினைத்தவள் போல், சும்மாயிருந்தாள். அப்படியும் இருக்க முடியவில்லை. பிடரிமுடியை மேற்பக்கமும், முன்முடியை பின்பக்கமும் இழுத்து இழுத்து அல்லாடியபடியே சிந்தித்தாள். அவளவள், ஒரு காதலோடு நிற்காமல், மறுகாதல், மறுபடியும் காதல்னு ஜோடி மாற்றம் செய்கிறாள்கள். இவளோ ஒரு சிலரை ஏறெடுத்துப் பார்த்தாலும் அவர்களில் எவனையும் காதலிக்காமல் இருந்தவள். பொம்பளைன்னா ஒரு அடக்கம். ஒடுக்கம் வேணும்னு சின்ன வயதிலிருந்தே அம்மா திட்டித் திட்டியும், அப்பா சாட்டைக் கம்பை ஆட்டி ஆட்டியும், அவள் அக்காவுக்குச் சொன்னது, அப்போது அவளுக்குக் கேட்டதோ என்னமோ, இவளுக்குக் கேட்டது. அவளை அடித்தபோது அவள் ‘மந்தக்குறத்தி’ மாதிரி சும்மா இருந்தாலும், இவளுக்கு வலித்தது. இப்படிப்பட்ட தனக்கா இந்தத் தண்டனை என்று அவள் தடுமாறினாள். நினைக்க நினைக்க கோபம் கூடிக்கொண்டே போனது. அரை மணி நேரத்திறகு முன்புதான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/122&oldid=1371695" இலிருந்து மீள்விக்கப்பட்டது