பக்கம்:ஈச்சம்பாய்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

மனத்திலும் குடிபுகுந்து அல்லற்படுத்துவதே 'பாக்குமரம்' கதையின் மைய இழை.

எகத்தாள நடை

சொல்ல வருவதை நறுக்குத் தெறித்தாற்போல் ஒரு தொடரிலேயே உணர்த்திவிடுவது ஆசிரியர்க்கு ஆகிவந்த ஒன்று.

வாயை, ஆபாச ஊற்றாக்கி நாடறிந்த பேச்சாளராகி விட்டார்.

அப்போதைய நல்லவளான அந்தப் பெண் அமைச்சர்.

'அடப்போடா! என்பதுபோல் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தாள்.'

'அன்று அலுவலகப் பவுர்ணமி நாள்.'

இப்படிப் பல இடங்கள்!

புதுமைப்பித்தன் கதைகளில் இழையோடும் நையாண்டிக் குறும்பைச் சமுத்திரத்தின் பழைய கதைகளில் பரவலாகக் காணலாம். இந்தத் தொகுதியிலும் சில இடங்கள்:

அலுவலக நிர்வாகியான முதியவர் அங்குப் பணியாற்றும் மீனாவைக் கண்களால் அளவெடுக்கிறார். "அவளைப் பார்த்த அவரது கண்கள் மார்பகத்திற்கு வந்ததும், மூடிக்கொண்டன. 'சிவசிவ' என்று வாயைப் பேச வைத்தன. பின்னர் மனதிற்குள் கஷ்டப்பட்டு அவளை ஒரு மகளாகப் பாவித்துக் கொண்டார்."

சம்பள நாளில் அலுவலகத்தில் “இன்ஸ்டால்மென்ட் புடவை வியாபாரியைப் பார்த்த மல்லிகா, கட்டிய புடவை நழுவிப் போனதுபோல் தவித்தாள். மாதச்சீட்டுக்காரனைப் பார்த்த சிங்காரம், தானே ஏலத்தில்போகப் போவதுபோல் தவித்தான்."

"கோதையம்மா நீட்டிய டெலிபோனை, ஒரு பயில்வான் கர்லாக் கட்டையை எடுப்பதுபோல் ராமையா எடுத்தார். ஆத்திரத்தில் டெலிபோன் குமிழை, திருதராஷ்டிரன் வீமன் சிலையைப் பிடித்ததுபோல் பிடித்தபடியே எகத்தாளமான குரலில் கேட்டார்".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/13&oldid=1495096" இலிருந்து மீள்விக்கப்பட்டது