பக்கம்:ஈச்சம்பாய்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

ஈச்சம்பாய்


ராசகுமாரி, மயினியைப் பார்த்தாள். குரங்கு மூஞ்சுக் குடிகாரனிடம் மாட்டிக் கொண்ட பூமாலை. அவளைப் பார்க்கப் பார்க்க, அவளுக்காகவும், தனக்காகவும் ரெட்டிப்பாக அழுதாள். முந்தானையை வாயில் வைத்து திணித்துக் கொண்டே நின்றவளின் தலை தானாக ஆடியது. பிறகு அங்கிருந்து ஓடினாள். அழுகை ஆவேசமாகியது. இரண்டில் ஒன்றைக் கேட்டுவிட வேண்டும். வாழப்போகிறவளுக்கு சாகப் போகிறதுகள் நிச்சயிக்க முடியாது.

ராசகுமாரி, வீட்டுக்குள் கோபமாகத்தான் காலடி வைத்தாள்.

அப்பா, அவளைப் போல் ஒரு மதர்ப்பாய்த் தோன்றிய தேங்காயை மண்வெட்டியில் குத்திக் குத்தி ‘உரித்துக்’ கொண்டிருந்தார். லேசாய் இடைவெளி கொடுத்த, தேங்காய் மட்டையை பல்லைக் கடித்து, பல்லால் இழுத்து, வாயில் கவ்வி வெளியே துப்பினார். அப்படியும் முரண்டு பிடித்த அந்தத் தேங்காயை தூக்கி, அம்மிக்கல்லில் ஒரே போடாக போட்டு, மீண்டும் அதைத் தோலுரித்தார். அதைப் பார்க்க பாரிக்க, ராசகுமாரிக்கு பயமெடுத்தது. அண்ணன்காரன், தொழுவத்து ஒற்றை மாட்டை அழைத்து தொட்டியில் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான். அண்ணிக்காரி, புண்ணாக்கையும், தவிட்டையும் எடுத்து தொட்டிக்குள் போட்டு, பனை மட்டையால் கலக்கிக் கொண்டிருந்தாள். அண்ணன் அப்பாவிடம் கேட்பது அவளது இரைந்த காதுகளுக்குள் ஊடுறுவியது.

“எத்தனை நாளைக்குப்பா இந்த ஒத்த மாட்ட வச்சு தண்டத் தீனி போடுறது?... ராமாசாமி மச்சான் மாடு என்ன ஆச்சு? அதை வாங்க வேண்டியதுதானே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/130&oldid=1371757" இலிருந்து மீள்விக்கப்பட்டது