பக்கம்:ஈச்சம்பாய்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

129


வாங்கிடலாம்தான்... ஆனால், அது நம்ம மாட்டுக்கு ரெண்டு ‘விரக்கடை’ கட்டையா இருக்குது... ஜோடி சேராது அதனாலதான் வேண்டாம்னு விட்டுட்டேன்...”

ராசகுமாரி, அந்த ‘அந்நியர்களை’ கோபம் கோபமாகப் பார்த்தாள். ஆனாலும், அடி மனப்பயம், அந்தக் கோபத்தை அழுகையாக்கியது, மீண்டும் வீட்டுக்குள் போனாள். வாயை வாயே மெல்வதுபோல், உதடுகளை மூடவிட்டு, உள்ளுக் குள்ளே பற்களை மோதவிட்டு, நாக்கை ஊழிநடனம் போல் ஆடவிட்டாள். அவளையறியாமலே ஒரு நாடோடிப் பாடல், எப்போதோ கேட்டது இப்போது பல மடங்காய் ஒலித்தது.

“முகமறியா மனிதருக்கு முந்தானி விரிக்கணுமோ?

இடமறியா வீட்டிலே இடறித்தான் விழுணமோ?”

உஷா - 22-1-95

ஈ.9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/131&oldid=1371762" இலிருந்து மீள்விக்கப்பட்டது