பக்கம்:ஈச்சம்பாய்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

133



பழங்களை முந்தானைக்குள்ளும், காசை அதன் முனைக்குள்ளும் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

மாலை வந்தது. கலெக்டர் வந்தார். கண்ணாடிகள் தந்தார். சீனிவாசன் பயந்ததுபோல் அங்கிருந்த எந்த ஒரு கிழவரோ அல்லது கிழவியோ குறை சொல்லவில்லை. பொன்னம்மா கிழவிக்கு அவசரப்பட்டுக் காசையும் ஆப்பிள்களையும் கொடுத்துவிட்டோமோ என்று சீனிவாசன் 'பின்யோசனை' செய்தார்.

கண் சிகிச்சை முகாம் ஒரு வழியாக முடிந்தது. கிழவர்-கிழவியரும் யூனியன் ஜீப்பில் ஏற்றப்பட்டு, அன்று இரவே தத்தம் வீடுகளில் இறக்கப்பட்டார்கள். மிகப் பெரிய கல்யாணம் ஒன்று நல்ல விதமாக நடந்து முடிந்த திருப்தி.

மறுநாள், கமிஷனர் எல்லோரையும் கூப்பிட்டார்.

இந்த முகாம்ல நாமதான் முதல்ல வந்திருக்கோமாம். கலெக்டர் சொல்லிவிட்டாராம். டிவிஷனல் ஆபீஸ்ல இருந்து சொன்னாங்க. நாளைக்கு ஷீல்டு வருமாம். ஒங்க எல்லோருக்கும் நன்றி. பப்ளிஸிட்டி ஸார், இதக் கண்டிப்பா பேப்பர்ல போடணும். வாங்கப்பா. இந்தச் சந்தோஷமான சமாசாரத்த கொண்டாடாம விடக் கூடாது. நைட்ல எங்கயாவது போயி டின்னர் சாப்பிடலாம். டி.டி.ஓ.வையும் வரச் சொல்லலாம். சீனி, பணத்த கலெக்ட் பண்ணுய்யா. ஒனக்கு உண்மையிலேயே மோதிரம் போடணுமுய்யா - பித்தளையிலாவது."

'கலெக்க்ஷன்' நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் வெளியே இருந்து கத்திக்கொண்டே உள்ளே வந்தார். பொன்னம்மா பாட்டியின் மகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/135&oldid=1371903" இலிருந்து மீள்விக்கப்பட்டது