பக்கம்:ஈச்சம்பாய்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

ஈச்சம்பாய்



"யோவ்! எங்க அம்மா எங்கய்யா? அவள என்னய்யா செய்திங்க? சொல்லுங்கையா. எல்லார் அம்மாவும் வந்தர்ச்சு. எங்கம்மா மட்டும் வரல... என்னய்யா பண்ணுனிங்க? பாவிங்களா..."

ஆணையாளர் திடுக்கிட்டார், நழுவப் போன பப்ளிசிடி ஆபீசரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே, 'நேத்து நைட்லயே ஜீப்ல அனுப்பிட்டோமே... என்னய்யா இது, பெரிய இழவாப் போச்சு. சீனி! வாய்யா டிரைவர கூட்டியாய்யா. சீக்கிரமா கூப்பிடுங்யா. கூப்புடு கூப்புடு.' என்றார்.

டிரைவர் வந்த கையோடு, விளக்கினார். "ஓ. ம்ஞ்சப் புடவை பாட்டியா? ஜீப்ல ஏறமாட்டேனுட்டு இந்த ஊரிலயே மகள் வீடு இருக்கதாச் சொல்லி, அங்க போறேன்னு பிச்சிக்கிட்டு..."

"பிச்சுப்புடுவேன் பிச்க. எங்கம்மாவுக்கு நான் ஒருத்தன்தான் பிள்ள. பொண்ணுங் கிடையாது, மண்ணுங் கிடயாது, என்னய்யா பண்ணுனிங்க? பாவிங்களா.. கொன்னுட்டீங்களா? லாரிக்குக் குறுக்கே தள்ளிப்பிட்டிங்களா? என்னய்யா பண்ணுனிங்க... அம்மா. அம்மா... யோவ்! இன்னும் அரை மணி நேரத்துல அம்மாவக் காட்டலன்னா, நான் கலெக்டர்கிட்ட போவேன்... இல்லன்னா அண்ணங்கிட்ட (மந்திரி) போகட்டுமா?"

கமிஷனர் எள்ளுங்கொள்ளுமாகப் பேசினார். "நீ யாருகிட்டயும் போகவேண்டாம். என்கிட்டயே வா. யோவ் சீனி! சைக்கிள்ல வடக்குப் பக்கமா போ. ஜல்தி... என்ஜினியர் ஸார், உங்க மோட்டார் சைக்கிள்ல கிழக்கா போங்க. ஒங்க காண்ட்ராக்டர ஸ்கூட்டர்ல தெற்கா போகச் சொல்லுங்க. இந்தாப்பா டிரைவர்! நீ மேற்காப் போ. பப்ளிஸிடி ஸார்! ஒங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/136&oldid=1371811" இலிருந்து மீள்விக்கப்பட்டது