பக்கம்:ஈச்சம்பாய்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

ஈச்சம்பாய்



ஆனா பஸ் எங்க நிக்குமுன்னு.. தெரியாம ராத்திரி முழுதும் கத்திக்கிட்டே இருந்துட்டேன். கோவிச்சுக்காதப்பா!"

"ஆமா. ஜீப்ல போனால் என்ன? எதுக்காவ பஸ்ல போக நினைச்சே?"

"ஜீப்ல இருக்கிறவங்க பழத்த பிடுங்கிக்கிட்டா, மருமவகிட்ட குடுக்க முடியுமா? டிரைவரே பழத்தைத் தந்திடுன்னு கேக்கலாம். கோவிச்கக்காதப்பா. இந்தா, பழஞ் சாப்பிடு. முனியா! ஏண்டா அழுவுற? நான் தான் வந்துட்டேனே.... அவா- மூளியலங்காரிமூதேவி சண்டாளி... உன் பொண்டாட்டி... எப்படிடா இருக்கா? அவளுக்காவ இம்மாம் பழத்தையும் ஒளிச்சி வச்சிருந்தேன். வா போவலாம். அவா தேடிக்கிட்டு இருப்பாள். மசக்கக்காரி... சீக்கிரமாப் பழத்தக் குடுக்கணும்."

ஆணையாளர் சிரித்தார். அவர் சிரித்ததைப் பார்த்து, சீனிவாசன் சிரித்தார். காமாட்சியும், சிரித்தாள். விவகாரம் சிரிப்பாய் சிரிக்காமல் நல்லபடியாய் முடிந்ததற்காக எல்லோரும் சிரித்தார்கள்.



- குமுதம், 9-3-78
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/139&oldid=1371806" இலிருந்து மீள்விக்கப்பட்டது