பக்கம்:ஈச்சம்பாய்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

ஈச்சம்பாய்



நிலையிலும் தன் மாராப்புச் சேலையைச் சரியாக்கிக் கொண்டு, சிறிது நேரம் அவனையே மௌனமாகப் பார்த்தூள். முப்பது வயதிருக்கும். பூஞ்சை உடம்பு நிஜக் கருப்பு. திடீரென்று அவள் கத்தினாள்.

'அடுத்துக் கெடுத்த துரோகியின் வீடு இது அண்ணாத்தே இங்கேயா அண்ணாத்தே வந்து நிக்கிற? என்னால ஒன்னை உட்காருன்னு சொல்ல முடியலியே அண்ணாத்த சொல்ல முடியலியே! என் மனசே இந்தப் பாடு படும்போது, ஒன் மனக என்ன பாடு படுதோ. நான் சண்டாளி அண்ணாத்தே எனக்குச் சந்தேகம் வந்தப்பவே ஒங்கிட்ட சொல்லியிருக்கணும். புருசனைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு நெனச்சு கட்சில என்னையே காட்டிக் கொடுத்துட்டேன். ஒன் மனக கஷ்டப்படக் கூடாதுன்னு நெனச்சு இப்போ ஒனக்கும் எனக்குமா கஷ்டத்த குடுத்திட்டேன் அண்ணாத்தே. நான் யார் கிட்ட சொல்ல? சொன்னாலும் தீருற குறையா?"

கன்னையா, அவளை வெறித்து வெறித்துப் பார்த்தான். பிறகு, நாவல் புத்தகத்தைப் பிரித்து, பாதி முகத்தை மூடிக் கொண்டிருந்த பூவம்மாவைப் பார்த்தான். மகனைத் தூக்கி வலது தோளில் அணைத்தபோது, அந்தச் சிறுவன் காலை உதறினான். பிச்கவா பட்டதால் பயல் உதறுவதைப் புரிந்துகொண்ட கன்னையா, சிறுவனை வலது கைக்குப் பதிலாக, இடது கை அணை போட இடது தோளுக்குக் கொண்டு வந்து போட்டான். சிறுவன், தன் மோவாயைக் கன்னையாவின் தோள் பட்டையில் அழுந்திப் பதித்து, கண்களை மூடிக் கொண்டான். கன்னையா வெளியே நடக்கப் போனான்.

டெய்லரின் மனைவி அவனை வழி மறித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/144&oldid=1371789" இலிருந்து மீள்விக்கப்பட்டது