பக்கம்:ஈச்சம்பாய்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

ஈச்சம்பாய்



ஏதோ நாலு பேரு தீர்மானிச்சாங்களேன்னு போட்டேன். நான் போட்ட கயிறு ஒனக்கு சுருக்குக் கயிறா பூட்டுது. பரவால்ல. இப்போ அதை கழட்டிக் கொடுப்பியாம். ரெண்டு குண்டுமணி தங்கத்துக்காவ கேக்கல. நம்ம நாட்ல தாலிக்கு இன்னும் மதிப்பிருக்கு. அதனாலதான் கேக்கறேன். குடுக்கிறியா புண்ணியவதி?"

பூவம்மாள் கழுத்துப் பக்கம் கைகளைக் கொண்டு போகவில்லை.

"கழட்டுடி தாலிய. தேவடியாளுக்கு எதுக்குடி தாலி? அதக் கழட்டுறியா.... இல்ல, கழுத்தோட சேத்துத் தாலிய எடுத்துக்கணுமா? உம் சீக்கிரம்!"

பூவம்மாள் தன்னை நோக்கி இரண்டி நடந்த கன்னய்யாவைப் பார்த்துக் கொண்டே, தாலிக் கயிற்றைக் கழட்டி அவனிடம் நீட்டினாள். அவன் அதட்டினான்.

"தரையில வைடி."

வைத்தாள்.

கன்னய்யா அந்தத் தாலிக் கயிற்றை எடுத்து, தலையைச் சுற்றி மூன்று தடவை கொண்டு வந்துவிட்டு, பிறகு அதன்மேல் காறித் துப்பிவிட்டு, வீட்டுக்கு வெளியே எறிந்தான், அது எச்சிலையை நக்கிக் கொண்டிருந்த நாயின் மூக்கில் போய் விழுந்தது.

டெய்லர் மனைவி கேவிக் கொண்டே பேசினாள்.

"இவள் கொண்டையப் பிடிச்சு எங்கேயாவது இழுத்துப் போட்டுட்டுப் போயிடு அண்ணாத்தே. இவள் என்னைக்கு வந்தாளோ அப்போ பிடிச்சு உதை திங்கறேன் அண்ணாத்தே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/146&oldid=1371785" இலிருந்து மீள்விக்கப்பட்டது