பக்கம்:ஈச்சம்பாய்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமுத்திரம்

149



ஏழு வருடமாகக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பிள்ளை.... இரவில் வீடு திரும்பும் போதெல்லாம், அப்பா' என்று சொல்லி அரவணைத்த மகன்... பெற்றால்தான் பிள்ளையா' இந்த லோலாயி டெய்லரோடும் அதிக நாள் வாழ மாட்டாள். இவளிடம் குழந்தையும் பலியாகணுமா? முடியாது. இவன் என் பிள்ளையா இல்லாட்டியும் இவனுக்கு அப்பன் நான்தான். குயில் முட்டையைக் காகம் அடை காக்கலியா? பெத்தேனோ இல்லியோ, இவன் என் பிள்ளை ... இவனைச் சீரழிய விடப்படாது.

கன்னய்யா அந்தச் சிறுவனை மௌனமாகத் தோளில் போட்டுக் கொண்டான். அனைவரும் அசைவற்று நின்றபோது, அவன் மட்டும் குழந்தையோடு அசைந்து அசைந்து நடந்தான். சிறிது தூரம் கடந்ததும், மடியிலிருந்த அரிசிப் பொரி கடலையை பையனின் வாயில் போட்டான்.

பையன் சிரித்தான்.



- குமுதம், 15-5-80
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/151&oldid=1371773" இலிருந்து மீள்விக்கப்பட்டது