பக்கம்:ஈச்சம்பாய்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிண மாலை

'நான், அயோக்கியனாய் ஆகாமல் போனதற்காக வருத்தப்படும் யோக்கியனோ?'.

இப்படி, தன்னைத்தானே கேட்டுக்கொண்டார் பழனிச்சாமி, அந்த கய விமர்சனத்தில், எதிரில் சின்னத்தன மான காட்சிகளை மாட்சிமைப் படுத்தும் சின்னத்திரையை பார்க்கவுமில்லை, கேட்கவுமில்லை. ஒலியும் ஒளியும் பார்த்துக் கொண்டிருந்த புனிதா, வீட்டின் காம்பவுண்டு கேட் போடுகிற ஒலியை வைத்தும், காலடிச் சத்தத்தை வைத்தும் அப்பா வருவதை அறிந்து கொண்டாள், அவசரத்தில், தொலைக்காட்சிப் பெட்டியை நீல நிறமாக்க மறந்துபோய், அதில் தோன்றிய நீலக் காட்சிகளை, அப்படியே தக்கவைத்துவிட்டு, அவசரத்தில் உள்ளே ஓடி விட்டாள். அப்பா மட்டும் அவளை ஒலியும், ஒளியுமாக பார்த்திருந்தால், எள்ளும் கொள்ளுமாய் ஆகியிருப்பார். காம்பவுண்டு கதவு, இசை மயமாய் ஒலித்தால் அதைத் தந்தை திறப்பதாக அர்த்தம். ராணுவ வீரன் போல் டக், டக் என்று சத்தம் கேட்டால் தந்தையின் நடை என்று கண்டுகொள்ளலாம். அவள் எதிர்பார்த்தபடியே அவர் தந்தை பழனிச்சாமிதான் வந்தார். வந்ததும் வராததுமாக, சமையல் கட்டில் தட்டுமுட்டுச் சாமான்கள் எழுப்பிய ஓசையை அடக்கும் வகையில் உரத்த குரலோடு, 'மாப்பிள்ளை வீட்டில இருந்து சேதி வந்ததா?' என்று வயிற்றை எக்கி ஆவலோடு கேட்டார். உடனே 'தெரிஞ்சது தானே' என்று பாத்திரக் குரல்களோடு இன்னொரு சத்தம். அது மகளைப் பற்றியோ அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/152&oldid=1371764" இலிருந்து மீள்விக்கப்பட்டது