பக்கம்:ஈச்சம்பாய்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

153



ஏற்பட்டிருக்காது. காலில் விழாத குறையாக, கையெடுத்துக் கும்பிட்ட ஒரு சில தொழில் அதிபர்களுக்கு, சலுகை காட்டியிருந்தால் ஏதாவது ஒரு பிரபல கம்பெனியில் இப்போது 'கன்ஸல்டண்டாக' இயங்கி இருக்கலாம். இப்போது ஊமையாகிப் போன டெலிபோன் தொடர்ந்து ஒலித்திருக்கும். வாசலை அடைப்பதுபோல் ஒரு கார் 'பழி' கிடக்கும். அரகக் கடனில் எப்போதோ வாங்கிய பாடாதிக் காரைத் தள்ளுவதற்கு ஆள்தேடும் சிரமம் ஏற்பட்டிருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, புனிதாவிற்கு ஒரு 'எக்ஸிகியூட்டிவ்' மாப்பிள்ளை கிடைத்திருக்கும். முன்பெல்லாம் வீடு கொள்ளா விசிட்டர்கள். இப்போதோ இவர்தான் எங்கேயாவது விசிட்டராகப் போகவேண்டிய நிலை...

பழனிச்சாமி, ஆங்காங்கே முடியுதிர்ந்த தலைப் பொட்டல்களைத் தடவியபடியே நிமிர்ந்தார். படித்ததையும், பார்த்ததையும் மனப் படிவங்களாக்கினார். எளிமையில்லாமல் நேர்மையாய் இருக்க முடியாது. 'தாசில்தார் செத்தால் போகமாட்டார்கள்..... ஆனால் அவர் நாய் செத்தால், துக்கம் விசாரிக்கத் துடித்துப் போவார்கள்' என்ற அலுவலக பழமொழி நெசந்தானோ.

அப்போது தான், அங்குமிங்குமாய்ப் பார்த்த பழனிச்சாமியின் கண்களில், அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி பட்டது. ஒலியும் ஒளியும் போய், இப்போது ‘நாடும் நடப்பும்', அமைச்சர்கள் உருவத்தில் அல்லாடின. ஒருவர் மத்திய அமைச்சர்.... இன்னொருவர் மாநில அமைச்சர்.... இருவரும் ‘இருபால்' அமைச்சர்கள்.... ஆனாலும் 'ஒருபால்' அமைச்சராய்த் தோன்றினார்கள். ஒரேமாதிரியான கீழ்நோக்கிப் பார்க்கும் கவிழ்ப்புப் பார்வைகள். எதிராளி பேகம்போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/155&oldid=1371880" இலிருந்து மீள்விக்கப்பட்டது