பக்கம்:ஈச்சம்பாய்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

157



இரண்டாய்ப் பிளந்து சரித்து வைக்கப்பட்டதுபோன்ற பள்ளத்தாக்குகள்.... சதுப்பு நிலக்காட்டு கோதுமைச் செடிகளுக்குள் தக்கதும் மிக்கதும் இல்லாமல், சிங்கம் இவரைப் பார்க்கிறது. முன்பெல்லாம் இவரை 'நீயும் நானும் ஒன்று. ஒரே ஒரு வித்தியாசம் நீ சைவம்' என்பதுபோல் பார்க்கும் சிங்கம், இப்போது, அவரையே விழுங்கப் போவதுபோல் கோரப் பற்களைக் காட்டுகிறது. சடுகுடு பாடி வருகிறவனின் காலை வாருவதற்காக, பதுங்குகிற எதிரணி வீரன் போல், பவ்வியமாய்ப் பதுங்கும் புலியின் அழகு, இப்போது, அவருக்கு கோரமாகத் தெரிகிறது. ஆசீர்வதிப்பதுபோல் துதிக்கையை அரைவட்டமாய் மேலே தூக்கித் வைத்தபடி, ஒற்றைக் காலைத் தூக்கி நிற்கும் யானை இப்போது அவரை அதே தும்பிக்கையால் தூக்கி, காலில், அழுத்தப் போகிறது.

- பழனிச்சாமி பதறிப்போனார். 'என்னாச்சு எனக்கு' என்று பல தடவை தன்னைத்தானே பார்த்துக் கொண்டார். கேட்டுக் கொண்டார். எங்கேயாவது கால்போன போக்கில் நடந்து, மனம்போன போக்கில் நடக்க வேண்டும்போல் தோன்றியது.

அதற்குள், அழைப்பு மணியைக் கூட அடிக்காமல், நான்கு பேர் உரிமையோடு உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் பழனிச்சாமி ஆறடி மனிதரானார். மனம் ஆனந்தக் கூச்சலிட்டது. அவர்களை உட்காரச் சொல்லக்கூட அவருக்குத் தோன்றவில்லை. அவர்கள் தான் உட்கார்ந்து, அவரை உட்காரும்படி கையாட்டினார்கள். புனிதாவைப் பார்த்துவிட்டுப் போன ஐ.ஏ.எஸ் மாப்பிள்ளை ககுமார் வந்திருக்கிறான், கம்பீரமான அமர்க்களப் பார்வை. ஆண்டான் தோற்றம். மை தடவியது போன்ற மெல்லிய மீசை. இன்னொருத்தர் அவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/159&oldid=1371874" இலிருந்து மீள்விக்கப்பட்டது