பக்கம்:ஈச்சம்பாய்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

'உங்களுக்குத்தான் தெரியுமே, உய்த்துணர்ந்து கொள்ளுங்கள்' என்று விட்டு விடுகிறார். சில செய்திகள் சொல்லப்படாமல் உணர்த்தப்படுவது வாசகனை மேம்படுத்தும் இலக்கிய மதிப்பாகும்.

விதிவிலக்கு இல்லாத விதிவிலக்கு

பொதுவாகச் சமுத்திரத்தின் கதைத் தொகுதிகள், ஒரு கதையைப் போல் இன்னொரு கதை இல்லை என்னும் முறையில் வகைமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பன. இந்தத் தொகுதியும் அதற்கு விலக்கில்லை. ஓர் உணர்ச்சி, ஒரு நிகழ்ச்சி, ஒரு பண்பு என ஏதேனும் 'ஒன்றை'யே மையமாக வைத்து வரையப்பட்டவையே பல கதைகள். எனினும் 'கட்டக் கூடாத கடிகாரம்' ஒரு புதினத்துக்கான கதை விரிவைக் கருக் கொண்டுள்ளது. இருக்க வேண்டியதை இருப்பதைப்போல் சொல்லும் கலைத்திறனைப் 'பிணமாலை' முதலிய சில கதைகளில் காணலாம்.

கதைக் குழந்தைகளின் மேனியில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் படிந்திருக்கும் அழுக்குகளையும் சுட்டியாக வேண்டும். பின்னோக்கு உத்தியில் பின்னப்பட்ட 'ஒரு சபதத்தின் மறுபக்கம்', 'பூவம்மாவின் குழந்தை' ஆகிய கதைளில் செய்கைத்தனமும் நாடகமயமாக்கலும் தலைகாட்டித் திரைப்படப் பாணி முகங்காட்டுகிறது. ‘காதல் குருவிகளின் பார்வையிலே' போன்ற கதைகளின் முடிவில் ஆசிரியர் நுழைந்து பேசும் பகுதிகள் தனித்து நிற்கின்றன. இவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

படைப்பாளிகளின் மொழிப்பிழைகள்

தமிழ் மொழியின் எழுத்திலக்கணத்தில் மூன்றில் இரண்டு பகுதி புணர்ச்சி இலக்கணம். அதில் வல்லெழுத்து மிகுந்து வரும் இடங்கள், மிகாது வரும் இடங்கள் பேசப்படுகின்றன. அதனை அறிந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளிகள் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. 'நொண்டி சென்றான்' என்பது, ஒரு தொடர். இதில் நொண்டி என்பது நொண்டியாகிய ஆளைக் குறிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/16&oldid=1495100" இலிருந்து மீள்விக்கப்பட்டது