பக்கம்:ஈச்சம்பாய்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

ஈச்சம்பாய்



சித்தப்பா. அரைகுறையாய் உரிக்கப்பட்ட தேங்காய்போல் ரோமக்கணைகளைக் காட்டிய முகம். இன்னொருத்தர், உடல் முடுக்கு இல்லாமல், வெறும் தோரணை முடுக்கு மட்டுமே கொண்டவர். ஒரு நடுத்தரம், கையில் ஆளுயுற மாலையுடன் உட்காராமல் நின்றார். சுவரில் சாய்ந்து அந்த மாலையையும் தன்மேல் சாத்திக் கொண்டார். அவர் இடுப்பில் பெரிய பெல்ட்.

பழனிச்சாமி, 'பூமாரி' என்று சொல்லி முடிக்கு முன்பே, வீட்டம்மா அவசர அவசரமாய் கைகளையே தலைக்கு சீப்பாக்கினார். ஓடி வந்து, தனக்கென்று மானசீகமாக கிழித்துக் கொண்ட ஒரு கோட்டைத் தாண்டாமல், அவர்களையே வாய்கொள்ளாச் சிரிப்பாய்ப் பார்த்தார். பக்கவாட்டு பால்கனியில் நின்ற புனிதா, சுகுமாரின் கண்படும் வகையில் முகத்தை மட்டும் நீட்டிக் கொண்டாள். நீட்டியதை அப்படியே நாணத்தோடு நிறுத்திக் கொண்டாள். கடவுள் கைவிடவில்லை, தந்தை ஒதுக்கப்பட வில்லை. கனவுக் காட்சிகள் நினைவாகப் போகின்றன.

மாப்பிள்ளை இளைஞனும், அவனது சித்தப்பாவும் ஒருவரையொருவர் பொருள்படவோ, அல்லது போட்டியாகவோ பார்த்தார்கள், பிறகு இருவருமாய் எழுந்து, பெல்ட்காரரின் கையில் இருந்த ஆளுயுர மாலையை வாங்கப் போனார்கள். அந்த பெல்டோ, அந்த ரோஜாப்பூ மாலையிலிருந்து, அதைச் கற்றிய தையிலையை எடுக்கப் போனார். முடியாது போகவே, அவற்றைப் பிய்த்து சில இதழ்களையும் உதிர்த்தார். இலையைக் கட்டிய நூல் கயிற்றை, துண்டிக்க முடியாமல், தனது நீண்ட நெடிய பற்களால் கடித்துக் குதறினார் - நாய், அணில் வாலை, காலில் அழுத்திக் கொண்டு, தலையைக் கடிக்குமே அப்படி. இதனால் சரிகை நூல்களும், கிழிந்து ஐந்தாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/160&oldid=1371754" இலிருந்து மீள்விக்கப்பட்டது