பக்கம்:ஈச்சம்பாய்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

61



பழனிச்சாமியின் புருவங்கள் மேலோங்கி, மோவாய் குனிந்தபோது, இ.ஆய. மாப்பிள்ளை, மாமாவுக்கு ஆறுதல் சொன்னான்.. அதுவும் புனிதாவைப் பார்த்தபடியே, புதிய புறநானூற்று வீரனாய் சூளுரைத்தான்.

'கவலைப்படாதீங்க மாமா. நானும் என் பங்குக்கு, நம்ம சாதிக்கு எவ்வளவோ செய்திருக்கேன். எங்கெல்லாம் நம்ம சாதி சிறுபான்மையா இருக்குதோ, அங்கெல்லாம் நம்ம சாதி போலீசு இன்ஸ்பெக்டர்களை போட வச்சேன். நம்ம சாதிப் பெரும்பான்மையா இருக்கிற இடங்களுல, அந்த சாதியில உதவாக்கரையா இருக்கிற தாசில்தார்களை நியமிக்க வச்சேன், அந்த சாதிக்காரப் பயல்கள கொலை செய்த நம்ம சாதி ஆட்கள் மேல நீயூசென்ஸ் கேஸ் போட வச்சேன். அந்த சாதியில கம்மா கத்துனவங்கள கொலை கேகல புக் பண்ண வச்சேன். அதோட நம்ம சாதி ஐ.ஏ.எஸ் காரங்ககிட்டயும், ஐ.பி.எஸ், காரங்ககிட்டயும் தொடர்பு வச்சு, இனிமேல் அந்த சாதிப் பயலுக ஏழேழு ஜெனரேசனுக்கும் தலையெடுக்க முடியாதபடி கடமை ஆற்றணுமுன்னு சொல்லியிருக்கேன்'.

'ஒங்க மாப்பிள்ளைய கம்மா சொல்லப்படாது சம்பந்தி, நம்ம சாதியில ஆயிரம்பேர் செய்ய முடியாத காரியத்த, இவன் ஒருத்தனே செய்து முடிச்சிருக்கான், இவனுக்காக நாமெல்லாம் பெருமைப்படணும்'.

'போங்க சித்தப்பா. என்னோட சமூகக் கடமையைத்தான் நான் செய்தேன். செய்வேன்'.

மாப்பிள்ளை ஐ.ஏ.எஸ், புனிதாவைப் பார்த்து , பெருமிதமாகத் தலையாட்டியபோது, பழனிச்சாமி, 'சமூகக்கடமை, சமூகக்கடமை' என்று மாப்பிள்ளை ஆகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/163&oldid=1371870" இலிருந்து மீள்விக்கப்பட்டது