பக்கம்:ஈச்சம்பாய்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

ஈச்சம்பாய்



போகிறவன் முழங்கிய வார்த்தைகளை, மனதுக்குள் முணுமுணுத்தார். பிறகு அவர்கள் வருகையின் காரணத்தை அறிவதுபோல், பார்வையால் தெரியப்படுத்தினார். உடனே வினாடி வினாவில் அதாரிட்டியான மாப்பிள்ளை விளக்கினான்.

' இப்படிப்பட்ட கொலைகார சமயத்துல எதுக்காக மாலையும் கையுமா வந்தோமுன்னு நினைக்கீங்க. அப்படித் தானே மாமா - சித்தப்பா நீங்களேச் சொல்லுங்க'.

'சொல்றேன். நம்ம சாதி பிரமுகர்கள் எல்லாரும், முந்தா நாள் சந்திச்சோம். இந்த சந்திப்புல சிதறிக்கிடக்கிற நம்ம சாதி அமைப்புகளோட தலைவர்களும் கலந்துகிட்டாங்க. இனிமேல் அந்தப் பயலுகள விட்டு வைக்கக் கூடாதுன்னு தீர்மானிச்சோம். இதுக்காக, ஒரு ஒருங்கிணைப்புப் பேரவையை உருவாக்கி இருக்கோம். அதுக்கு நீங்கதான் தலைவரா இருக்கணுமுன்னு, உங்க மாப்பிள்ளையான இந்த சப்-கலெக்டரு முன்மொழிஞ்சதும், ஒரே கைதட்டல். இனிமேல் நீங்கதான் எங்க தலைவர். உங்களுக்கு ஒரு கண்டசலா காரையும், ஜீப்பையும் கொடுத்திடுறோம். பாதுகாப்புக்கு நாலைஞ்சு பேர கொடுக்கோம். இவங்க ஜீப்ல நீங்க போகிற இடத்துக்கெல்லாம் வருவாங்க. எல்லாச் செலவும் பேரவை பொறுப்பு. பணம் ஒரு பிரச்சனை இல்ல. நீங்க தமிழ்நாடு முழுதும் சுற்றுப் பிரயாணம் செய்து நம்ம மக்களோட பேசணும். அவங்க ஏற்பாடு செய்கிற கூட்டங்களில் முழங்கணும். உங்க பேச்சை வெளியிடாத பத்திரிகையோ, தொலைக்காட்சியோ இருக்காது. இருக்கக்கூடாது. அந்த சாதிப் பயலுகள ரெண்டுல ஒண்ணு பார்த்திடணும். உங்களுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்காத முதலமைச்சரே, உங்கள கூப்பிட்டு பேசற நிலைமையை ஏற்படுத்தணும்'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/164&oldid=1371750" இலிருந்து மீள்விக்கப்பட்டது