பக்கம்:ஈச்சம்பாய்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

163



பழனிச்சாமி, அருகே நின்ற புனிதாவை பொருட்படுத்தி, அவர்கள் பேசியதை அதிகமாய் பொருட்படுத்தாமல், போகிற போக்கில் பேசுவது போல் பேசினார்.

'அரசியல்வாதி... அரசாங்க அதிகாரி... குறிப்பா ஐ.ஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிங்க -- கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், திரைப்படக் கலைஞர்கள் -- இவங்களுக்கு சாதியே கூடாது. அப்படியே சாதி தேவைன்னா, அது ஒரே ஒரு சாதியாத்தான் இருக்கணும். அதுக்குப்பேர்தான் தமிழ்ச்சாதி. குறிப்பா அதிகாரிங்க... மக்களோட வரிப்பணத்துல சம்பளம் வாங்குறவங்க. இவங்க, எல்லா மக்களையும் ஒரே தட்டுல வச்சுதான் பார்க்கணும்'.

எதிர்கால மாப்பிள்ளை, எதிரி மாப்பிள்ளையாய் ஆனதுபோல் புனிதாவையும், பழனிச்சாமியையும் மாறி மாறியும், கோபம் கோபமாகவும் பார்த்தான். ஆனாலும் அவனைக் கையமர்த்திவிட்டு, சித்தப்பா பூசி மழுப்பினார்.

'பதவியில் இருக்கும்போது தான், உங்களால நம்ம சாதிக்கு, பைசா பிரயோசனம் கிடையாது, இப்போகூட இவன் முகத்துக்காகத்தான் உங்கள தலைவரா நியமிச்சது. அதோட நீங்க ரிட்டையர்டு ஆகிட்டீங்க. அந்த சாதியில ரிட்டையர்டு ஆனவங்க சொந்த சாதிக்கு கொம்பு சீவி விடும்போது, நீங்க இப்படி பிடிவாதம் பிடிக்கிறதுல நியாயம் இல்ல'.

'நீங்க சொல்ற அதிகாரிங்க, மனச்சாட்சி இல்லாதவங்க. மக்கள் விரோதிங்க. இப்போகூட, எனக்குக் கிடைக்கிற ஓய்வுத் தொகை மக்களோட வரிப்பணத்துல இருந்துதான் வருது. இதனால எல்லா மக்களுமே எனக்கு வேண்டியவங்க'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/165&oldid=1371868" இலிருந்து மீள்விக்கப்பட்டது