பக்கம்:ஈச்சம்பாய்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

165



ஆவேசமாகப் பேசத்துடித்த புனிதாவை, பழனிச்சாமி கையமர்த்துகிறார். அதற்குள், வேண்டிவந்த விருந்தாளிகள், வேண்டாதவர்களாய் வெளியேறப் போகிறார்கள். பழனிச்சாமி கோபப்படாமலும், புன்னகைக்காமலும், அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.

'இந்தப் பிணமாலையை எடுத்துக்கிட்டுப் போங்க. இதுல இருக்கிற ஒவ்வொரு: இதழும், துண்டிக்கப்பட்ட ஒரு மனிதத் தலையாய் எனக்குத் தோணுது. இதனோட நிறம் மனித ரத்தக் கசிவாத் தெரியுது. தயவு செய்து எடுத்துட்டுப் போங்க'

ஆனாலும் அவர்கள், புதுமாலை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்ததுபோல் திரும்பிப் பார்க்காமலே நடக்கிறார்கள்.

 

ஆனந்த விகடன் - தோல்வில் வெற்றி
என்ற தலைப்பில், 13-17.98 இதழில்
பாரதியாரின் புதிய ஆத்திச்சூடிக் கதையாய்

பிரசுரமானது. (தன்மை இழவேல்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/167&oldid=1371742" இலிருந்து மீள்விக்கப்பட்டது