பக்கம்:ஈச்சம்பாய்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

167



ஆனால் அவரோ பேண்ட்க்குள் கிடந்த உடம்பை லுங்கிக்குள் மாற்றிக் கொண்டு கட்டில் சட்டத்தில் தலைபோட்டு சுவரில் தலை சாய்த்தபோது, அந்தம்மாவுக்கும் கோபம் கரையேறியது. முன் தலையில்' நரையேறிய முடியை இழுத்துப் பிடித்துக் கொண்டே கேட்டாள்:

"வாராவாரம் டெலிபோன்ல பேகற மருது, ஒரு மாசமா பேசலியேன்னு நான் துடித்தது மாதிரி, நீங்களும் தவித்து இருப்பீங்கன்னு நினைச்சது எவ்வளவு பெரிய தப்பாப்போச்சு... அம்மிக்கல் மாதிரி அப்படியே கிடக்கீங்க. ஆனாலும் இவ்வளவு ஆங்காரம் ஆகாதுப்பா."

ராமையா, அவள் பக்கமாய் முகத்தை நிமிர்த்திக்கொண்டே கேட்டார்:

"நான் இருக்காத நேரத்தைப் பார்த்து ஒங்கிட்ட மட்டும் பேசுறான்.. இதுல ஒனக்கும் சந்தோஷம்.."

"ஒங்களுக்கு கொஞ்சமாவது ஒரு இது இருக்குதா?-- இந்த மெட்ராசுல மத்தியானம் என்கிறது, அமெரிக்காவுல ராத்திரி.. ஒங்ககிட்ட அவன் பேசணுமுன்னா, அவன் நடுராத்திரியில எழுந்திரிக்கணும்..."

'சரி அவன் தூக்கம் கெட வேண்டாம்...'

ராமையா, மனைவியை நோக்கிய முகத்தை மறுபுறமாய்த் திருப்பிக் கொண்டார். ஆனாலும் அந்தம்மா, மகனுடன் பேசிய விபரங்களை, சுருக்கிச் சொன்னாள்:

'யுனிவர்சிட்டி பசங்களோட பைக்காரா நீர்வீழ்ச்சியை, பார்க்கப் போனானாம். அப்புறம் கனடா போனானாம். அதனால தான் நம்ம கூட பேச முடியலியாம். ஒரு கார் வாங்கிட்டானாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/169&oldid=1371866" இலிருந்து மீள்விக்கப்பட்டது