பக்கம்:ஈச்சம்பாய்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

ஈச்சம்பாய்



இரண்டாயிரம் டாலராம். கேக்கறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா!...

அசைவற்றுக் கிடந்த ராமையா, கட்டிலில் இருந்து துள்ளிக் குதித்தார்... சிறிது திகைப்படைந்தவர்போல் கண்களை துரத்தியவர், பின்னர் தலை நோகாமல் அடித்துக் கொண்டார். அந்தம்மாவை பகையாளிப் பார்வையாய் பார்த்தபடியே கத்தினார்:

'வீட்டு நிலைமை தெரியாத ஒரு தறுதலைப் பிள்ளையை பெத்துட்டு, அப்படிப் பெற்றதை சாதனையா வேற சொல்றியா- இரண்டாயிரம் டாலர்ன்னா எழுபதாயிரம் ரூபாஇவனுக்கு விசா கட்டணத்துக்கும், இன்சூரன்ஸ் தொகைக்குமுன்னு எங்க ஆபீஸ் பியூன் தேவராஜன்கிட்ட கடனா வாங்கினேன் பாரு-- இருபதாயிரம் ரூபா.. இவரு அமெரிக்க படிப்புக்கு, பேங்கில கடன் வாங்க, பழைய வீட்டு லோன்.. அடைக்கிறதுக்காக மளிகைக்கடை அண்ணாச்சிகிட்ட வாங்கினேன் பாரு முப்பதாயிரம் ரூபா.. அப்புறம் இவருக்கு தட்டு முட்டுச் சாமான்கள வாங்கிறதுக்காக, என்னோட படிச்ச ராமகப்புகிட்ட வாங்கினேன் பாரு ஏழாயிரம் ரூபா. இந்தக் கடன்கள எவன் அடைக்கிறது... எப்போ அடைக்கிறது... என் வாய் மொழியையே சட்டமா நினைச்சு, என் நாணயத்தை மட்டுமே நம்பிக் கொடுத்த கடன்கள், அவங்களுக்கு மஞ்சக் கடுதாசி கொடுக்கச் சொல்றியா..'

'ஒங்க நிலைமை புரியுது.. ஆனா அவன் நிலைமையும் நினைச்சுப் பாருங்க... அந்த ஊர்ல கார் இல்லாம, எங்கேயும் போக முடியாதாம். பஸ்கள் ரொம்பக் குறைச்சலாம்...'

'அதே அமெரிக்காவில நம்ம பையன்களும் பொண்ணுகளும் 'பேப்பர் போட்டும்... 'பேபி சிட்டிங்' செய்தும் பிழைப்பு நடத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/170&oldid=1371726" இலிருந்து மீள்விக்கப்பட்டது