பக்கம்:ஈச்சம்பாய்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

171



சிகப்பு படமாக விழுந்தது.. அதில் அவர் லெவலுக்கு பெரிய இடத்துப் பெண்ணான தன்னை அளவுக்கு மீறிய பண்பாடு உள்ளவளாகவும், இவரை அதே விகிதாச்சாரத்தில் காட்டானாகவும் எடிட் செய்து கொண்டாள். அப்புறம் பத்து வருடமாக பிள்ளையில்லாத இடைவேளை; இதற்குள் இந்த மன்மதருக்கு அடுத்த கல்யாணம் பேசிய மாமனார்.. மாமியார். அவர்களிடமிருந்து தன்னை தற்காக்க வீட்டில் ஒரு சின்ன அறையை பூஜையறையாக ஆக்கியது... அப்படியும் பிள்ளை பிறக்காததால் மருந்தீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டது. அம்மா சன்னதி முன்னால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய்க் குவியலாய் இருக்கும் மண்ணில் சில துகள்களை புறங்கைகட்டி குனிய முடியாமல் குனிந்து உண்டது.. இவர் அந்தக் கோவில் பக்கமே தலைகாட்டாதது. அப்புறம் மகள் பிறந்தது... இதனால் மாமனாரும், மாமியாரும் . ஒட்டிக்கு ரெட்டியாய் திட்டியது.... மீண்டும் மனமுடைந்து அதே கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்தது... அடுத்த ஆண்டே ஆண் குழந்தை பிறந்தது... அவனுக்கு மருந்தீஸ்வரர் நினைவாய் பேர் வச்சது. கர்நாடகப் பேராய் வைக்கிறியேன்னு இவரு கிளப் டான்ஸ் ஆடுனது.. 'என் பேரை ஏன் வைக்கலே'ன்னு மாமனார் உதிரமாடன் குதியாய்க் குதித்தது... பிள்ளைகள் பெரியவர்கள் ஆகிக்கொண்டு வந்தது... இவரு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு பிரமோசன் வீதம் இரண்டு பிரமோசன் வாங்கினது. மாமானார், மாமியார் மண்டையைப் போட்டது....

கோதையம்மாவின் மனதிற்குள், கருப்பு வெள்ளையாகவும், பிறகு கோவாக் கலரிலும் ஓடிய நினைவுப்படம் திடீரென்று வண்ணப்படமானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/173&oldid=1371861" இலிருந்து மீள்விக்கப்பட்டது