பக்கம்:ஈச்சம்பாய்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

173



அவளுக்கும் புரிந்துவிட்டது... அவளோடு 'டூ' போடும் போதெல்லாம். 'வயிறு பசிக்குது, சோறு கொண்டு வா' என்று சொல்லாமல் சொல்லும், கள்ளத்தனமான இருமல்...

அவருக்குக் காபி கொடுக்காததும், அந்தம்மாவுக்கு உறைத்தது.... இப்போது போய்க் கொடுத்தால், எகிறுவார்... ஆகையால் கேஸ் அடுப்பை ஒளிமயமாக்கினாள்... மிக்ஸியை தட்டி விட்டாள்... பருப்பைக் கடைந்தாள்... முட்டையை உடைத்தாள்.... பாத்திரங்களைக் கழுவினாள்... அரை மணி நேரத்திற்குள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, சாப்பாட்டு மேசைக்கு தட்டையும், இதர வகையறாக்களையும் கொண்டுவந்துவிட்டு, அவர் இருந்த அறைக்குள் போனாள். ராமையா குப்புறக் கிடந்தார். இரண்டு கைகளையும் விரித்துப் போட்டு வேணுமானால் ஆணியடித்துக் கொள் என்கிற மாதிரி ஆடாமல் அசையாமல் கிடந்தார்... கோதையம்மா உரக்கக் கூவினாள்.

'பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் சல்லுன்னு' சொல்வாக... ஆனா இந்த வீட்டுல பாதி உல்ட்டா . சரி சாப்பிட வாங்க... சூடு ஆறிடும்...

ராமையா, கட்டிலிலிருந்து மீண்டும் துள்ளிக் குதித்தார்.-- அவள் கண்களை விரலை ஆட்டாத குறையாக, கிட்டே போனார். பின்னர் அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாய் கற்றிச் சுற்றி வந்தார். அவ்வப்போது நின்று நின்று, அந்தம்மா நெருங்கி நெருங்கி அடங்காச் சினத்தோடும், ஆற்ற முடியாத சுய பரிதாபத்தோடும், அவற்றிற்கேற்ப, ஏற்ற இறக்கமான குரலோடும், பொரிந்து தள்ளினார்...

"கடனைக் கேட்க கூச்சப்பட்டு... அதேசமயம் என்னைப் பாத்து கையை நெறிக்கானே. எங்க ஆபீஸ் பியூன் தேவராஜன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/175&oldid=1371859" இலிருந்து மீள்விக்கப்பட்டது