பக்கம்:ஈச்சம்பாய்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

ஈச்சம்பாய்



அவன் என் கழுத்த நெறிக்கணும் என்கிறியா.. கூட்டம் நகராம இருக்க, எல்லார்கிட்டயும் காச வாங்கி கல்லாவில் போட்டுட்டு, அப்புறம் என்ன சரக்குன்னு கேட்கிற- கறார் பேர்வழியான மளிகைக் கடை அண்ணாச்சி என் கழுத்துல துண்டைப்போட்டு இழுக்கணும்கிறியா... எல்லாவற்றிற்கும் மேலாய், நான் நேர்மையானவன்னு என் மனசில ஒரு பெருமிதம் இருக்குதேஅது ஒரேயடியாய் ஓடிப் போயிரணும் என்கிறியா... நூறு டாலர் மிச்சம் படுத்தி இருக்கான்னு நீ கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி சொன்னபோது, மொத்தமா அனுப்பப் போறான்.. வாக்குத் தவறாம வாங்குன கடன அடைச்கடலாம்முன்னு, நினைச்ச என்னன ஒரேடியாய் நாக் அவுட் செய்திட்டானே..."

மேற்கொண்டு பேசமுடியமல், ஆத்திரம் நாக்கை அடைக்க, ஆவேசம் தொண்டையை இழுக்க, அல்லோகல்லோலப்பட்ட ராமையா, மேஜையிலிருந்த ஒரு கவரை எடுத்து, தரையில் வீசப் போனார். நீளவாகு கவரின் அடிவாரத்தில் வீட்டுக்கதவு மாதிரி, ஜிகினா காகிதத்திற்குள், அவரது அருமைப் பையனின் பெயரும், முகவரியும் எழுதப்பட்டிருந்தது... இரண்டு கைகளையும் தலையில் வைத்தபடி, 'மோசம் போயிட்டேனே! மோசம் போயிட்டேனே!.... என்றார்.. பிறகு மீண்டும் ஆவேசியாகி, எழுந்தார்... அந்தக் கவருக்குள் இருந்த காகிதத்தை, கோதையம்மாவின் முகத்திற்கு முன்னே நீட்டியபடியே கத்தினார்...

"இதோ பாத்தியா. பேங்க் கடனுக்காக இவருக்கு எடுத்த ஆறு லெட்ச ரூபா இன்சூரன்ஸ்க்கு பிரீமியம் கட்டச் சொல்லி வந்திருக்கிற ஆறாயிரம் ரூபாய் நோட்டீஸ்... உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தால் சொல்லு. அவங்ககிட்ட கையேந்துகிறேன். அதுலே மிச்சம் இருந்தால், ஓம் பையன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/176&oldid=1371714" இலிருந்து மீள்விக்கப்பட்டது