பக்கம்:ஈச்சம்பாய்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

177



"சொல்டா... அதான் நீ கார் வாங்கின மகிமையை ஒங்க அம்மா சொல்லிட்டாளே... சரி.- என்ன சொல்ற. நீ ஒருத்தன்... அதுக்கு நீ இங்க வரணும்... இல்லாட்டா நாங்க அங்க வரணும்.... நல்ல காரத்தானே வாங்குனே... நீ பழகின பிறகு காரை ஓட்டு... டிசம்பர்லயா.. வா... வா... இல்லல்ல கண்டிப்பா நீ வரணும்... என்னடா பெரிய மனுசன் மாதிரி பேகறே- வாங்குன கடனை எங்களுக்கு அடைக்கத் தெரியாதோ. பெரிசா பேகறான் பாரு பேச்சு... டிசம்பர்ல கண்டிப்பா வாடா..... உன் முகம் என் கண்ணுக்குள்ளேயே... கண்ணுக்குள்ளே.. அழலடா. வாய்க்குள் கொக போயிட்டு. அதனால்தான். கண்டிப்பா வந்துடு."

கோதையம்மா அவரை புதிராய் பார்த்தபோது, ராமைய்யா அவள் கண்களுக்குள் அகப்படாமல் டெலிபோன் பேச்சைத் தொடர்ந்தார்.

"அதெப்டிடா.. கடனை அடைக்காம இருப்பேன்? இன்னும் ஒரு வருசத்திலே ரிட்டயர்டு ஆகிறேனா.. அதுல மூணு லட்ச ரூபா கிராஜிட்டி வருமா.- இதக்காட்டி என்னோட உதவியால தொழில் துவங்கி இருக்கானே சங்கரன், அவன்கிட்ட ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி, வாங்கின கடனை எல்லாம் அடைச்சிடுவேன். அப்படியே அவன் தராட்டாலும், இருக்கவே இருக்கு... வாலண்டரி ரிட்டயர்மெண்ட்- உனக்கெதுக்குடா இந்த அதிக பிரசங்கித்தனம்? வார பாட்டுக்கு வந்துட்டு போர பாட்டுக்கு போ... மறந்துடாதே டிசம்பர்லே கண்டிப்பா வந்துடணும்... அம்மா கிட்ட பேசணுமா- இப்பதான் அவசரமா... பாத்ரூமுக்கு போயிருக்காள்.... அப்படி ஒண்ணும் முக்கிய விஷயம் எதுவும் இல்லியே. சரி வச்சுடறேன்..."

ராமைய்யா டெலிபோனை வைக்க மனம் இல்லாமல் வைத்தார்... கோதையம்மா, அவரைப் பார்த்து குறுஞ்

ஈ.12.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/179&oldid=1371854" இலிருந்து மீள்விக்கப்பட்டது