பக்கம்:ஈச்சம்பாய்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

181



சுப்பு, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியையும், அவனையும் பொதுப்படையாகப் பார்த்துவிட்டு, பொதுப் படையாகவே பதிலளித்தான்.

லேசாய் பிரஷர். தலை சுத்துச்சு. வந்துட்டேன். ஓ.கே. மிஸ்டர் அப்பாத்துரை.. நான் போய் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்."

"என்ன ஸார் நீங்க. பிரஷரை ஈஸியாய் எடுத்துக்கப்படாது, வாங்கோ- என் ஆபீஸ் கார் இங்கேதான் நிற்குது. டாக்டர்கிட்டே போயிட்டு வரலாம்."

சுப்பு, தர்மசங்கடமாய் நின்றபோது, அவள் கோபத்தோடு பேசினாள்.

"மொதல்ல உங்க பிரஷரைப் பாருங்கோ ஸார். நீங்க கத்துற கத்தலையும் பதறுற பதறலையும் பார்த்தால் உங்களுக்கும் இவரைவிட அதிகமாகவே இருக்கும்... மொதல்ல நீங்கதான் டாக்டர்கிட்ட போகணும்."

அவள் கணவனைக் கண்டிப்புடன் பார்த்தாள். அவன் உள்ளே போனதும், கதவைத் தாழிடப் போனாள். அப்பாத்துரை, நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான், அவள் முகம் நேருக்கு நேராய்க் கதவோடு சேர்ந்து நீண்டபோது, விலகிக் கொண்டான்.

உள்ளே வந்தவள், கணவனின் பூட்ஸ்களை எடுத்து ஒரு பக்கமாக வைத்தாள். சாய்வு நாற்காலியின் நுனியில் உட்கார்ந்திருந்தவனை, லேசாய்ப் பின்னுக்குச் சாய்த்து, அவன் நெற்றியைத் தடவி விட்டாள். பிறகு சமையற் கட்டிற்குள் ஒரு கையில் கண்ணாடி டம்ளருடனும், இன்னொரு கையில் மாத்திரையுடனும் வந்தாள். அவளின் இரு விரல்களும் கண்ணாடிக்குள் பிம்பங்களாய்ப் பிரதிபலித்து, உள்ளே இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/183&oldid=1371849" இலிருந்து மீள்விக்கப்பட்டது