பக்கம்:ஈச்சம்பாய்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

ஈச்சம்பாய்



பாதித் தண்ணீருக்கு வேலி கட்டியதுபோல் இருந்தன. அவன் தலையை இழுத்துப் பிடித்து, மாத்திரையை வாயில் போட்டுவிட்டு, டம்ளரை நீட்டினாள். அவனையே பார்த்தாள், "நீ அவரை அப்படிப் பேசியிருக்கக் கூடாது" என்று பேசுவார் என்று பார்த்தாள். பேச வேண்டும் என்று நினைத்தவள் போல், அவனையே முகத்தில் குற்ற உணர்வை அழுத்தி வைத்துப் பார்த்தாள். அவனும் பேசினான். அப்பாத்துரையைப் பற்றி அல்ல.

"சந்திரா! என்னை பெட்ரூமுக்குக் கூட்டிட்டுப் போ! தலை கத்துது. உட்கார முடியலை... என்னை லேசாய்த் தூக்குறியா?"

"அட கடவுளே.. என்னங்க பண்ணுது... டாக்டரைக் கூட்டிட்டு வரட்டுமா?"

"வேண்டாம். நீ என் பக்கத்துலேயே இருக்கணும்.."

அவள், அவனைத் தூக்கி நிறுத்தினாள். அவனைத் தோளோடு சாய்த்தபடி, படுக்கை அறைக்குள் கூட்டிப் போனாள். அவன், அவளிடமிருந்து நழுவிக் கட்டிலில் விழுந்தான். பிறகு 'தலையணை தலையணை என்றான். உடனே அவள் தலைமாட்டில் உட்கார்ந்து, அவன் தலையை மெல்லத் தூக்கித் தன் மடியில் போட்டாள். அவன், அவளை அண்ணாந்து பார்த்தான். லேசாய் உணர்ச்சிவசப் பட்டவனாய், கைகளை பின்னுக்குக் கொண்டுபோய் அவள் முதுகில் சங்கிலிப்பிடி போட்டான்.

கால்மணி நேரம் போனது தெரியாமல் போனது.

அவன், அவள் முதுகில் கற்றிய கைகளை எடுக்கப் போனபோது, அவள் அதைத் தடுத்துவிட்டாள். அவனின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டாள். பிறகு கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/184&oldid=1371693" இலிருந்து மீள்விக்கப்பட்டது