பக்கம்:ஈச்சம்பாய்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

ஈச்சம்பாய்



இன்றைக்கு ஏன் சொல்லவில்லை? எப்படிச் சொல்வார்? நான்தான் முகத்தில் அடித்தாற்போல் பேசி விட்டேனே. அவருக்கு மட்டும் சுயமரியாதை இருக்காதா என்ன..?

அவள், சுயக்கட்டுப்பாட்டுடன், கதவைச் சாத்தினாள். ஒரு நிமிடத்திற்கு மேல் அவளால் உள்ளே இருக்க முடியவில்லை. பின்கதவைத் திறந்தபடியே, பால்கனி மாதிரியான பகுதியில் நின்றாள். அதன் கவரில் சாய்ந்தபடியே, வெளியே எக்கிப் பார்த்தாள். அவள் கணவனும், அவனும் ஜோடியாக நடந்து போனார்கள். ஒரு தடவை அவன், "பாருங்க, நம்மோட பெயர்ப் பொருத்தத்தை. நீங்க கப்பு. நான் அப்பு." என்று சொன்னது அவளுக்கு நெஞ்சில் மீண்டும் வேரூன்றிச் செடியாய் வளர்கிறது. வாயில் பூவாய்ப் புன்னகைத்தது. அதே சமயம், நெஞ்சுக்குள் ஒரு சின்ன நெருடல். ஆஜானுபாகுவாய் சதைப் பெருக்கமோ குறையோ இன்றி அவன் கம்பீரமாக நடந்து போகிறான். ஆனால் அருகில் அவரோ குள்ளங் குள்ளமாய் நடக்கிறார். உதிர்ந்து போகப் போவது மாதிரியான பூஞ்சை உடம்பு. இது போதாது என்று இந்த வயதிலேயே பிளட் பிரஷர். கல்யாணத்திற்கு முன்பே இருந்திருக்கு. ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் என் தலையில்.

அவள், தனக்குள்ளேயே ஏய் என்று சொல்லிக் கொண்டாள். பின் கதவை அடைத்துவிட்டு, முன் கதவைத் திறந்தாள். கணவன் மீது, கோபப்பட்டதற்காக, தன் மீது கோபப்பட்டாள். இதற்குக் காரணமான அவன்மீதும் கோபம் வந்தது. ஒரு பெண்ணிடம் அளவோடு பழகத் தெரியாத மனிதர்.

அவள், அவனைப் பின்னோக்கிப் பார்த்தாள்.

அவளுக்கு மேற்கொண்டு சிந்திக்கக்கூட பயமாக இருந்தது. இந்தாண்டுக் கால இல்லறக் குடத்தில், இரண்டு மாதகாலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/186&oldid=1371687" இலிருந்து மீள்விக்கப்பட்டது