பக்கம்:ஈச்சம்பாய்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

185



பரிச்சய நஞ்சு விழுந்துவிடக் கூடாதே என்று பயப்பட்டவள் போல், தலையில் கைபோட்டாள். சுவரில் தலையைச் சாத்தினாள்.

இந்த அரசாங்கக் குடியிருப்பில் காலியாய் இருந்த முதல் வீட்டிற்கு, அவன் வந்த மறுநாள், இவளோடும், இவள் கணவனோடும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அறிமுகம் நட்பாகியது. இவர்களிடம் மட்டுமல்ல. எல்லோரிடமும் இன்முகமாகவே இருப்பான். குழந்தைகள் "அங்கிள், அங்கிள்” என்று முதுகில் ஏற, அவன் குதிரையாவான். கல்லூரிப் பையன்களின் கிரிக்கெட்டுக்கு அம்பயராவான். கிழவர்களோடு கிழம்போல் நடந்தபடியே வேதாந்தி ஆவான். இதுவரை இந்தச் சந்திராவுக்கு, அவன் பதவி மூலமோ குடும்ப மூலமோ துல்லியமாகத் தெரியாது. அடிக்கடி டூர் போகிற, கார் வைத்திருக்கிற பதவி. சென்னையில் வயதான அம்மாவும்... வயசுக்கு வந்த தங்கையும் இருக்கிறார்களாம். ஒரு தடவை வழக்கம்போல வீட்டுக்கு வந்திருந்தபோது, "வீட்ல எப்போ கூட்டி வருவீங்க" என்று கப்பு கேட்டான். அவன் பேசாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, "கல்யாணம் ஆகலியா?" என்று இவள் கேட்டாள். உடனே அவன் பூசி மழுப்பினான். "ஏதோ ஆச்கது.... எப்படியோ ஆச்சுது, அம்மாவும், தங்கையும்தான் உலகம்" என்றான்.

அவன் அப்போது கண் கலங்கியதை இப்போது நினைத்தபோது சந்திராவுக்கு மீண்டும் கண் கலங்கியது. அவன் மீது தான் கொண்டிருப்பது வெறும் அனுதாபந்தான்" என்று பல தடவை வலிய நினைத்தாள். மனத்துக்குத் தெம்பு வந்தது.

இருபது நாட்களும் போய், இருபத்தொன்றாவதும் வந்துவிட்டது. இந்த நாட்களில் - சுப்பு - அவள் கணவன் தெளிவாக இருந்தான். பிரஷர் போன இடம் தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/187&oldid=1371845" இலிருந்து மீள்விக்கப்பட்டது