பக்கம்:ஈச்சம்பாய்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

ஈச்சம்பாய்


ஞாபகம் வருது. இதனால ஒங்களை நினைக்காமல் இருக்க முடியல. உங்களை மறக்கிறதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க, மேடம்..."

"அப்படின்னா பாக்கு மரத்தைப் பார்க்காதீங்க..."

"அதெப்படி... தோக்கும் இடமெல்லாம் பாக்கு மரம். பாக்குமரமே... ஹலோ மிஸ்டர் சுப்பு! ஸாரி - நேற்று நைட்ல லேட்டாய் வந்தேன், அதனால ஒங்களைப் பார்க்க முடியல. எப்படி இருக்கீங்க?... காலையிலேயே வந்துட்டீங்க.."

"ஐ ஆம் பிஸி மிஸ்டர் அப்பு. புராஜெக்ட் ரிப்போர்ட்டை எடுக்க மறந்திட்டேன். ஓகே. அப்புறம் பார்க்கலாம்."

சுப்பு மேற்கொண்டு பேசாமல் உள்ளே போனான். தொடர்ந்து வந்த மனைவிக்கு வழிவிட்டு வாசலில் கதவைப் பூட்டினான்.

அரைமணி நேரமாய் அங்குமிங்கும் குடைந்து, இருவரும் புராஜெக்ட் ரிப்போர்ட்டைக் கண்டுபிடித்தார்கள். அதைக் கையில் வைத்து உருட்டியபடியே, பேசாமல் இருந்தவனைப் பார்த்து, அவள் தான் கேட்டாள்.

"ஆபீஸ் போகலையா...?"

"நாம் நம்புறபடி எதுவும் நடக்குதா என்ன...?"

"என்ன சொல்றீங்க..."

"பழையபடியும் தலை சுத்துது, சந்திரா, வா சந்திரா, என்னைப் பிடிச்சுக்கோ... அய்யய்யோ."

சந்திரா, பதறிப் போனாள். அவனைக் கைத்தாங்கலாகக் கட்டிலுக்குக் கூட்டிப் போனாள். அவசர அவசரமாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/190&oldid=1371653" இலிருந்து மீள்விக்கப்பட்டது