பக்கம்:ஈச்சம்பாய்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

ஈச்சம்பாய்



இவனுக்குத் தாயானாள். குழந்தைகளுக்குச் சொல்வதுபோல், குழந்தைத்தனமான செய்தியைச் சொன்னாள். நெஞ்சை நிமிர்த்தி, குரலை நிர்த்தாட்சண்யமாக்கிப் பேசினாள்.

"நீங்க பக்கத்து வீட்டுக்காரரோட சவகாசத்தைக் குறைக்கணும். நீங்க இல்லாத சமயத்துல சும்மாச் கம்மா வந்து பேசறார். மனிதருக்கு ஹார்ட்ல ஒண்ணும் இல்லதான். பட்... எனக்கு சங்கடமா இருக்குது... நீங்க ஆபீஸ் போயிட்டு வாரது வரைக்கும் நான் படும் பாடு, பெரும்பாடு."

அவன் பதிலேதும் பேசவில்லை. தன்னையே பார்த்தவளின் முகத்தை இழுத்துத் தன் மார்பில் போட்டுக் கொண்டான். அவள் முதுகைத் தட்டித் தட்டி விட்டான். பிறகு அப்படியே தூங்கிப் போனான்.

சமையல் வேலையில் கவனமாய் இருந்த சந்திரா, வெளியே இருந்து உள்ளே வந்த கணவனை அதட்டினாள்.

"பிரஷர்தான் விடமாட்டேங்கே. ஏன் வெளில போனீங்க..."

"இப்போ பிரஷர் இல்ல. துப்புரவாய் இல்லை . சந்திரா... சந்திரா- ஒரு விஷயத்தைக் கேளேன்... பக்கத்து வீட்டுக்காரன் கிட்டேதான் போனேன். 'ஏன் ஸார், நான் இல்லாத சமயத்துல என் ஒய்புகிட்டே பேசுனே'ன்னு அதட்டினேன், ஆசாமி பயந்துட்டான். அய்ந்து நிமிஷம் பித்துப் பிடித்தவன் மாதிரி இருந்தான், அப்புறம் அயாம் ஸாரி, தப்பு என் மேலதான், இதுமாதிரி இனிமேல் நடக்காதுன்னான். குவார்ட்டர்ஸக் காலி செய்துவிடுவானாம். ஆசாமி பேச்கலதான் வீரன். ஆனால் பயந்தாங்கொள்ளி. நான் எச்சரித்ததும் படுக்கையில் குப்புற விழுந்தான். சரி.-- நான் ஆபீஸ் போயிட்டு வாரேன்.-- இனிமேல் நான்கூட இவன்கிட்டே பேச மாட்டேன்... எதுவும் ஹார்ட்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/192&oldid=1371686" இலிருந்து மீள்விக்கப்பட்டது