பக்கம்:ஈச்சம்பாய்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

2



திட்டில் உட்கார்ந்திருக்கும் பெண் குருவிகளில் வடக்கிலிருந்து நான்காவதாக உள்ள குருவியாள் மீதுதான் அதற்குக் காதல். அங்கிருந்த குருவியாளும் ஒய்யாரமாகவே தோன்றியது. இந்தக் குருவியை ஆத்திரமாகவும் பார்த்துக் கொண்டது. இன்னுமா கூடு கட்டத் துவங்கலே...? உம் சீக்கிரம்.. நம்மளாலே காத்திருக்க முடியாது.... இப்படி இருந்தியானால்.... அப்புறம் காத்திருந்தவன் காதலியை நேத்து வந்தவன் கொண்டுபோன மனிதக் கதையாய் முடிஞ்சுடும்... சீக்கிரம் மச்சான்... சீக்கிரம்...!'

மஞ்சள் பிரகாசி நகரவில்லை. எல்லாக் குருவிகளையும்போல் ஈர்க்குகளைத் தயாரித்துவிட்டது; ஆனால் முடிச்கப் போடவில்லை. வாழ்ந்தால் அந்தக் குருவியாளுடன் வாழ வேண்டும் என்ற ஆசை. அவள் தன் கூட்டைப் பார்த்து நிராகரித்துவிட்டு வேறொரு 'வில்லன்' கூட்டிற்குள் போய் விடக் கூடாதே என்ற அச்சம். அதே சமயம் அழகாகக் கூடு கட்டி, அதில் மயங்கி, வேறு எந்த மொக்கு மூதேவிப் பெண் குருவியாவது, 'நான் தான் ஒன்னோட இருப்பேன்'னு அடம் பிடிக்கக் கூடாதேன்னு ஆதங்கம். இந்த அச்சத்தாலும், சந்தேகத்தாலும் அதற்கு 'அலகும் ஓடவில்லை .... கால்களும் ஓடவில்லை! இதன் காதல் பைத்தியத்தை அசல் பைத்தியமாக நினைத்தபடி சில ஆண் குருவிகள் அதனருகே வந்து அனுதாபமாகப் பார்த்தன.

பத்து நாட்கள் பறந்திருக்கும்.

மஞ்சள் பிரகாசி கூடு கட்டும் பணியில் இறங்கி விட்டது, நார்களில் சிக்கலை ஏற்படுத்தி பக்கங்களை உருவாக்கி விட்டது. குருவிக் காதலியாள் அடிக்கடி வந்து தட்டிக் கொடுத்தாள். இதர ஆண் குருவிகளுக்குப் பின்தங்கிய மஞ்சள் பிரகாசி, இப்போது முன் தங்க நினைத்து வேக வேகமாகச் கழன்றது. கற்றியது; பறந்தது; பற்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/23&oldid=1495614" இலிருந்து மீள்விக்கப்பட்டது